Kathir News
Begin typing your search above and press return to search.

'நீ வா திருநெல்வேலிக்கு' - வரம்பு மீறி பேசும் சுப.வீரபாண்டியனை எதிர்பார்த்து காத்திருக்கும் நெல்லை பா.ஜ.க மாவட்ட தலைவர்

வரம்புக்கு மீறி பேசிய சுப.வீரபாண்டியன்க்கு பா.ஜ.க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீ வா திருநெல்வேலிக்கு - வரம்பு மீறி பேசும் சுப.வீரபாண்டியனை எதிர்பார்த்து காத்திருக்கும் நெல்லை பா.ஜ.க மாவட்ட தலைவர்
X

Mohan RajBy : Mohan Raj

  |  28 Oct 2022 8:05 PM IST

வரம்புக்கு மீறி பேசிய சுப.வீரபாண்டியன்க்கு பா.ஜ.க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழுக்கு முடிவுரை எழுதும் தி.மு.க அரசை கண்டித்து நேற்று பா.ஜ.க சார்பில் மாநிலம் தோறும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடந்த பா.ஜ.க சார்பில் மாவட்ட கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் பேசிய பாஜக நெல்லை மாவட்ட தலைவர் மகாராஜன் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவரான சுப வீரபாண்டியனுக்கு பகிரங்க சவால் விடுத்தார். அப்போது அவர் பேசியதாவது, 'அண்ணாமலையை இடியட் என கூறுவதாக சுப.வீரபாண்டியன் தெரிவிக்கிறார் அது அவரது கருத்து. அதை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ளலாம்.

ஆனால் ஒட்டுமொத்த சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பூணூல் அறுப்பதாக சொன்னால் நீயாவது பூணூல் மட்டும்தான் அறுப்பாய் நான் உன் நாக்கை பிடித்து அறுப்பேன் என மிரட்டி உள்ளார். திருநெல்வேலிக்கு வந்து பாரு அறுக்குறோமா இல்லையா என தெரியும் என அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Source - Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News