Kathir News
Begin typing your search above and press return to search.

"எல்லாரும் வாங்க நீட் தேர்வுக்கு எதிரா போராடுவோம்" - நீட் ரத்து ரகசியம் தெரிந்த தி.மு.க'வின் அமைச்சர் அன்பில் அழைப்பு !

Breaking News.

எல்லாரும் வாங்க நீட் தேர்வுக்கு எதிரா போராடுவோம் - நீட் ரத்து ரகசியம் தெரிந்த தி.மு.கவின் அமைச்சர் அன்பில் அழைப்பு !

Mohan RajBy : Mohan Raj

  |  12 Sep 2021 6:45 AM GMT

"நீட் தேர்வு எதிர்த்து போராடுகிறோம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு வெற்றி பெறுவோம்" என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

திருச்சியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது நீட் தேர்வு பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார் அதில், "நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் போது அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கைக்கு பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பதில் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளன.

நீட் தேர்வு எதிர்த்து போராடுகிறோம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்போடு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தமிழக முதல்வருக்கும் உள்ளது" என கூறினார்.


Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News