Kathir News
Begin typing your search above and press return to search.

'உதவி தேவையில்லை'  - சீனத் தூதருக்கு பதிலடி கொடுத்த நேபாள பிரதமர்.!

'உதவி தேவையில்லை'  - சீனத் தூதருக்கு பதிலடி கொடுத்த நேபாள பிரதமர்.!

உதவி தேவையில்லை  - சீனத் தூதருக்கு பதிலடி கொடுத்த நேபாள பிரதமர்.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  29 Nov 2020 1:47 PM IST

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லைப்பகுதிகளில் மோதல் பதற்றங்கள் கடந்த மே மாதம் முதல் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்திய நேபாள உறவில் விரிசல் ஏற்படும் வகையில் சீனாவின் கைப்பிடிக்குள் சென்ற நேபாளம் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்தது.

இது நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே (NCP) விரிசல்களை ஏற்படுத்தியது. நேபாள முன்னாள் பிரதமர் பிரச்சந்தா, தற்போதைய பிரதமர் ஓலிக்கு எதிராக நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அணிதிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த மாத ஆரம்பம் முதலே அவர் பிரதமர் ஓலியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியே உடையலாம் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுப்பதற்கு சீனா பெரும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

நேபாள பிரதமர் ஓலி

இந்நிலையில் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கு இடையிலான உறவுகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய உளவுத்துறை தலைவர், இந்திய வெளியுறவு செயலாளர் ஆகியோர் நேபாளத்திற்கு சமீபத்தில் சென்று வந்து வந்தனர். நேபாள எல்லையில் 11 இடங்களை சீனா ஆக்கிரமித்து இருக்கும் செய்தியும் வெளிச்சத்திற்கு வந்தது.

சீனாவின் வலையில் இருந்து வெளியேறி ஒரு வழியாக இந்தியா பக்கம் முன்போல் சேர்வதற்கான அறிகுறிகள் தென்பட்டு வந்தன.

நேபாள முன்னாள் பிரதமர் பிரச்சந்தா

இந்த நிலையில், தன் கட்சி விவகாரங்களை தானே பார்த்துக் கொள்வேன் என்றும் மற்ற நாடுகளின் உதவி தனக்குத் தேவையில்லை எனவும் சீனத் தூதர் ஹௌ யங்கிக்கு பிரதமர் ஓலி தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனத் தூதர் ஹௌ யங்கி

நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவு அடையாமல் பார்த்துக் கொள்வதற்காக பிரதமர் ஒலி அப்பதவியில் நீடிக்கா வைக்காவிட்டாலும் பரவாயில்லை என்று சீனா எடுத்த முடிவே ஓலியின் கருத்துக்களுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. கட்சி பிளவடைந்தாலும் பரவாயில்லை என தன் ஆதரவாளர்களுக்கு ஓலி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சுவாரஸ்யமாக சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்க்கே வார இறுதியில் நேபாளத்திற்கு வருகை தருகிறார். நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சியில் நடைபெறும் விவகாரங்கள் குறித்தும் இந்த பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்த தலைவர்களை உள்ளடக்கிய ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் செயலகத்தில் இன்று (சனிக் கிழமை) நடைபெறவுள்ள கூட்டத்தில் ஓலி, தனக்கு எதிரான விமர்சனங்களுக்கு தனது பதிலை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது ஆனால் இது குறித்த விவாதம் எப்போது நடைபெறும் என்று தெரியவில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News