Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்து முக்கிய குடும்பம்தான்...! சவுக்கு சங்கர் வெளியிட்ட பகீர் தகவல்...!

அடுத்து முக்கிய குடும்பம்தான்...! சவுக்கு சங்கர் வெளியிட்ட பகீர் தகவல்...!
X

Mohan RajBy : Mohan Raj

  |  14 Sept 2023 8:35 PM IST

இறங்கிய அமலாக்கத்துறை...! சிக்கப்போகும் முக்கிய குடும்பம்...! சவுக்கு கொளுத்திப் போட்ட பகிர் தகவல்....!

தமிழகத்தில் நேற்று அமலாக்க துறையினர் பல்வேறு இடங்களில் மணல் மாஃபியா தொடர்பான பகுதிகளில் சோதனை நடத்தினர், நேற்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த சோதனைகள் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழகத்தில் மணல் மாஃபியாவின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது என விமர்சனம் எழுந்த நிலையில் மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர் எடுத்து நடந்தி வந்த மணல் குவாரிகளில் நேற்று காலை சுமார் 7 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில், திருச்சி திருவானைக்காவல் அருகே கொள்ளிடம் ஆற்றில் ராமசந்திரனுக்கு சொந்தமான மணல் குவாரியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டில் இறங்கினர். இந்தக் குவாரியை திருநெல்வேலியை சேர்ந்த ராஜா என்பவர் தான் மேற்பார்வை செய்து வருவதாகச் சொல்லப்படுகிறது. அரசு அனுமதித்த அளவை விட அளவுக்கதிகமாக இந்த மணல் குவாரியில் மண் கொள்ளை நடைபெற்று வருவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக 10 அடிக்கு மேல் ஆற்றில் மணல் அள்ளியது தொடங்கி, அதிகளவில் பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தியதாகவும், தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் எடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன. இந்நிலையில், நேற்று காலை 9 மணியளவில் 2 கார்களில் வந்த சுமார் 10 அதிகாரிகள் மற்றும் துணை ராணுவப் படையினர், இந்தக் குவாரியில் ரெய்டைத் தொடங்கினர்.

குவாரியில் இருந்த அலுவலகம் போன்ற தகர ஷெட் ஒன்றினுள் நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அங்கிருந்த ஆவணங்களை சோதனை செய்ய ஆரம்பித்தனர். மேலும், திருச்சி கனிம வள கண்காணிப்பு இளநிலை பொறியாளர் ஆறுமுகம் மற்றும் உதவி பொறியாளர் சாதிக்பாஷா ஆகியோரை சோதனை நடைபெற்ற மணல் குவாரிக்கு வரவழைத்து, அவரிடம் அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

`தினமும் எவ்வளவு மணல் அள்ள அனுமதி கொடுக்கப்பட்டது? முறைகேடாக மணல் அள்ளப்பட்டு வந்ததை ஏன் தடுக்கவில்லை? மணல் ஒப்பந்ததாரர்கள் யார் யார்?’ போன்ற பல்வேறு கேள்விகள் விசாரணையில் கேட்கப்பட்டதாகச் சொல்கின்றனர். மேலும், லாரியில் மணல் அள்ளுவதற்காக அரசு கொடுத்த டோக்கனைப் போல, சில போலியான டோக்கன்களை குவாரி தரப்பில் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகச் சொல்கின்றனர்.

அப்படியான சில ஆவணங்களையும் இந்த ரெய்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. காலை 9 மணிக்கு ஆரம்பித்த இந்த சோதனையானது, இரவு 7 மணிக்குத் தான் முடிவடைந்தது. சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற சோதனையின் முடிவில், அமலாக்கத்துறை அதிகாரிகளால், கனிம வளத்துறையைச் சேர்ந்த 3 பேர் அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படி மணல் மாஃபியாவை குறி வைத்து அமலாக்கத்துறை இறங்கியது எனவும், இது முதல் கட்டம் தான் எனவும் மேலும் இந்த மணல் மாஃபியாவிடம் சிக்கு ஆவணங்களை வைத்து அடுத்தடுத்த கட்டத்திற்கு அமலாக்கத்துறை நகரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் மூத்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'போலி ரசீது போலி QR கோடு, போலி கையெழுத்து, போலி கணக்கு ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாகவும் மாதம் 300 கோடிக்கு மணல் விற்பனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியிட்டுள்ளார். மேலும் 60% இந்த 300 கோடி ரூபாய் பணத்தில் கருப்பு பணம் புழங்கியுள்ளதாக மேலும் கட்சி நிதியாக குடும்பத்திற்கு சென்றுள்ளதாக தகவலை பகிர்ந்துள்ளார் இது உண்மையாகும் பட்சத்தில் அமலாக்க துறையின் இந்த ரைடு முக்கிய குடும்பம் வரைக்கும் செல்லும் என அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன...!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News