வன்முறையை வெளிப்படுத்தாததே சனாதன தர்மம் - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
By : Sushmitha
அரசியல் சாசனத்தின் படி ஒரு அமைச்சர் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பிறகு பொறுப்பில்லாமல் ஒரு மதத்தை ஒழிப்பேன் என்று கூறுவது மிகவும் தவறானது.
நேற்றைய தினம் கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பின் 90 வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தடைந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து சனாதனம் சர்ச்சை குறித்த கேள்விக்கு பதில் அளித்தார், இப்போது பேசிய நிதியமைச்சர் அரசியல் சாசனத்தின் படி அமைச்சர் ஒருவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டு அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கொள்கை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட மதத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது அதிலும் முக்கியமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைச்சருக்கு அந்த அதிகாரம் கிடையாது! இதே தமிழகத்தில் தான் ராமருக்கு காலணிகள் மாலை அணிவித்தை நான் கண்டிருக்கிறேன் ஆனால் அப்பொழுதும் வன்முறை என்பது முளைக்கவில்லை அதுதான் சனாதன தர்மம்! இப்படி வன்முறையை வெளிப்படுத்தாத மதத்தை பற்றி பேசும் இவர்களால் மற்ற மதத்தை பற்றி பேச முடியுமா மற்ற மதங்களை பற்றி பேச முடியாத முதுகிலும் இல்லாதவர்கள் இவர்கள்! என்று தன் கருத்துகளை தெரிவித்துள்ளார்.
Source - The Hindu