Kathir News
Begin typing your search above and press return to search.

திமுக நினைத்தது போல் இல்லை...! களம் மாறியது..! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!

திமுக நினைத்தது போல் இல்லை...! களம் மாறியது..! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!

Mohan RajBy : Mohan Raj

  |  20 Sep 2023 2:49 PM GMT

திமுக நினைத்தது போல் அல்ல...! அடியோடு மாறிய மோடியின் இமேஜ்....! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்...!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.. ஏற்கனவே திமுக பாஜகவை எதிர்க்க உறுதி பூண்டு தேசிய அளவில் எதிர்க்கட்சி கூட்டணியில் இணைந்தது, இந்த I.N.D.I.A கூட்டணியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து வரும் 2024 தேர்தலை எதிர்கொள்ள தயாராகிவிட்டது.

மேலும் கடந்த 2019 தேர்தலில் மோடி எதிர்ப்பு என்ற யுக்தியை பயன்படுத்தி தமிழகத்தில் 38 தொகுதிகளை திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றது அதுபோலவே இந்த முறை மோடி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை தமிழகத்தில் பயன்படுத்த திமுக - காங்கிரஸ் கூட்டணி யோசித்துவந்த நிலையில் அதற்கும் தற்போது பின்னடைவே ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனென்றால் கடந்த 2019 தேர்தல் போல் இல்லாமல் இந்த முறை மோடி எதிர்ப்பு என்ற யுக்தி மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழக மக்கள் மத்தியில் எடுபடாது என சில தகவல்கள் கிடைத்துள்ளன, அதுபோலவே கள நிலவரங்களும் தெரிவிக்கின்றன.

இந்த முறை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து கொண்டே இந்தியாவில் இருக்கும் மூலை முடுக்கெல்லாம் அவரது திட்டங்கள் மூலம் ஏழை எளிய மக்களின் வீட்டிற்குச் சென்றுள்ளார் என்பதை தமிழகத்தில் இருக்கும் திமுக - காங்கிரஸ் கூட்டணி உணர்ந்து விட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது தமிழகத்தில் எந்த கட்சியை சாராதவராக இருந்தவரும் சரி, கட்சி சார்ந்தவராக இருந்தாலும் சரி பிரதமர் சில தொழிலாளர்களுக்கு செய்த திட்டங்களால் குறிப்பாக இலவசமாக மோடி வீடு கட்டி தரும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம் அதிலும் குறிப்பாக தற்பொழுது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர்களில் விலை குறைக்கப்பட்டது மற்றும் பல திட்டங்கள் தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு சென்றுள்ளதால் தமிழகத்தில் மோடி ஆதரவு அதிகமாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் நடத்தப்பட்ட சில ஆய்வுகளின் முடிவுகளும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சாதகமாகவும் பிஜேபி கட்சிக்கு ஆதரவாகவும் தமிழகத்தில் மோடியின் அலை குறித்த ஆதரவு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்ற வகையில் முடிவுகள் வந்தது செய்திகளில் வெளியானது.

இந்த நிலையில் மத்திய அரசால் விஸ்வகர்மா திட்டம் உருவாக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி துவாரகாவில் இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டம் கைவினை கலைஞர்களாக இருப்பவர்களுக்கும் கைவினை தொழில்களையே நம்பி பாரம்பரியமாக கலைஞர்களாக இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருக்கும் கைவினை கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்தார். அப்பொழுது தமிழக மீன்பிடி வலை தயாரிக்கும் கே பழனிவேலுவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து விஸ்வகர்மா திட்டத்திற்கான சான்றிதழையும் வழங்கி உள்ளார் வழங்கும்பொழுது பெருமிதத்தில் மகிழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பழனி வேலுவை கட்டியணைத்து ஆற தழுவிக் கொண்டது கைவினை கலைஞர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடைக்கோடியில் இருக்கும் ஒரு கைத்தொழிலாளியான மீன் பிடி தொழிலாளியை பிரதமர் மாபெரும் திட்டத்தை உருவாக்கி அதில் அவர்களை பங்கு பெற வைத்து சான்றிதழை வழங்கி கௌரவப்படுத்தியதுடன் கட்டிக் கொண்டது உதாரணமாக கருதப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி நினைத்ததை விட பிரதமர் மோடிக்கான ஆதரவு அலை அதிகரித்திருப்பதாகவும், இந்த ஆதரவுகள் அனைத்தும் வாக்குகளாக மாறும் பட்சத்தில் கண்டிப்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு 15 முதல் 20 எம்பிகள் வரை கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. களம் மாறிவிட்டது திராவிட கட்சிகள் நினைத்தது போல் இல்லை, பாஜக தமிழகத்தில் வலுவாக காலூன்றிவிட்டது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News