Kathir News
Begin typing your search above and press return to search.

அமலாக்கத்துறை கையில் சிக்கிய பென்டிரைவ் - இனி செந்தில்பாலாஜிக்கு ஆண்டவன்தான் துணை...!

அமலாக்கத்துறை கையில் சிக்கிய பென்டிரைவ் - இனி செந்தில்பாலாஜிக்கு ஆண்டவன்தான் துணை...!

Mohan RajBy : Mohan Raj

  |  20 Sep 2023 2:52 PM GMT

செந்தில் பாலாஜியின் வழக்கை மாற்ற போகும் பென்டிரைவ்..! வசமா சிக்கிய VSB....!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் இருந்து வரும் நிலையில் அவருக்கு ஜாமின் கிடைப்பதற்காக செந்தில் பாலாஜி தரப்பு போராடி வருகின்றனர்.

ஆனால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் பல சிக்கல்கள் இருந்து வரும் நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று பல சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர், இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நீதிபதி எஸ் அல்லி தலைமையில் தற்போது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வேறு 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது இதனால் செந்தில் பாலாஜி இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்கு சற்று சிரமம் தான் என்று சட்ட ரீதியாக இந்த வழக்கை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

அதுபோலவே கடந்த முறை இந்த வழக்கு நீதிபதி எஸ் அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வாதாடிய வழக்கறிஞர் இருவருமே ஆஜரான நிலையில் அமலாக்கத்துறை தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜாமீன் மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கேட்டுக் கொண்டார். மேலும் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கை விரைவில் விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ் அல்லி வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு மீதான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதி கபில் சிபல் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் ஆஜராகி வாதிடுகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பண பரிவர்த்தனை செய்ததற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும் இது பாஜக அரசின் அரசியல் பழி வாங்கும் செயலாக அமலாக்க துறை மூலம் வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும் செந்தில் பாலாஜி இடமிருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனத்தை ஆறு நாட்களுக்கு மேலாக அமலாக்கத்துறை தங்கள் வசம் வைத்திருந்ததே மிகப்பெரிய தவறு என்றும் வாதிட்டனர் மேலும் செந்தில் பாலாஜி உடல்நலத்தை காரணம் காட்டி அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இது மட்டும் இல்லாமல் செந்தில் பாலாஜி வசமிருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவிலிருந்து 254 பைல்கள் இருந்த பட்சத்தில் 222 பைல்கள் அளிக்கப்பட்டு புதிதாக 441 பைல்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளை நீதிபதியின் முன் வைத்தனர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் மற்றும் அமலாக்கத் துறை சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர் வாதிடுகையில்அமைச்சர் செந்தில் பாலாஜி பணத்தை நேரடியாக கூட பெற்று இருக்கலாம் என்றும் அதற்கான சாட்சியங்கள் அனைத்தும் உள்ளது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் தற்போது உடல்நலத்தை காரணம் காட்டி அவரை ஜாமினில் வெளியிட்டால் இருக்கின்ற அனைத்து சாட்சிகளையும் கலைத்து விடுவார்.

மேலும் செந்தில் பாலாஜி இன்னும் பதவி அமைச்சர் பதவியில் நீடித்து வரும் நிலையில் அவர் அரசியல் செல்வாக்கை வைத்து இந்த வழக்கிலிருந்து தப்பிக்க முயற்சித்து விடுவார் என்று தங்கள் வாதங்களை முன் வைத்தனர். மேலும் வாதங்களை கேட்டு முடித்த பிறகு நீதிபதி அல்லி இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து உத்தரவிட்டார்.

எப்படியும் அமலாக்கத்துறை அந்தப் பென்டிரைவ் மூலம் செந்தில் பாலாஜியின் ஜாமின் கோரிக்கையை ரத்து செய்துவிடும் என்று தெரிகிறது, ஒற்றை பென்டிரைவால் தற்போது செந்தில் பாலாஜியின் ஜாமின் கேள்விக்குறியாகி உள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News