சீனியர் சொன்னா நாங்க கேட்ருவோமா..? மீண்டும் வம்பை இழுத்த உதயநிதி! நெருங்கிய கிளைமாக்ஸ்!
By : Mohan Raj
அப்பா, சீனியர்கள் சொல்லி கேட்காத உதயநிதி...! மீண்டும் பிரச்சினை ஆரம்பம்...!
கடந்த சில நாட்கள் முன்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து பேசிய வார்த்தைகள் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சனாதனத்தை எதிர்க்கக்கூடாது சனாதனத்தை ஒழிக்க வேண்டும், சனாதனத்தை எதிர்த்தால் மட்டும் போதாது சனாதன தர்மத்தை டெங்கு கொசு போல் மலேரியா போல் ஒழிக்க வேண்டும் என கூறியது அனைவராலும் விமர்சிக்கப்பட்டது.
குறிப்பாக பிரதமர் மோடியிலிருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா வரை சனாதன தர்ம பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சனாதன தர்மம் என்பது நீண்ட நாளாக கடைபிடித்து வரும் தர்மம், இந்து மக்கள் தான் சனாதன தர்மத்தை கடைபிடிக்கிறார்கள்! அப்படி என்றால் நீங்கள் இந்து மதத்தை தான் அழிக்க வேண்டும் என சொல்கிறீர்களா? அதைத்தான் ஒழிக்க வேண்டும் என நீங்கள் கட்சி நடத்துகிறீர்களா? என பல்வேறு எதிர்ப்புக் குரல்கள் உதயநிதிக்கு எதிராக இந்தியா முழுவதும் இருந்து எழுந்தன.
இன்னும் சொல்ல போனால் பல மாநிலங்களில் உதயநிதிக்கு படத்தை எரிப்பதும், உதயநிதியின் உருவ பொம்மையை கொளுத்துவதும், உதயநிதி தலைக்கு விலை வைப்பது போன்ற பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இந்த நிலையில் சிறிது காலத்திற்கு சனாதனம் குறித்து பேச வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வேறு அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியானது, அதன் பின்னணியில் I.N.D.I கூட்டணியில் சனாதனம் குறித்து பேசுவதற்கு ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்படுவோம்.
வடமாநிலங்களில் சனாதன தர்மத்தை எதிர்த்து பேசிவிட்டு அங்கு அவர்களால் வாக்கு வாங்க முடியாது எனவே சனாதனம் குறித்து பேசக்கூடாது என திமுக தலைமை முடிவெடுத்து அதனால் தான் முதல்வரே இப்படி கூறுகிறார் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
இது மட்டுமல்லாமல் இரு தினங்களுக்கு முன்பு கூட திமுக முப்பெரும் விழாவில் பேசிய திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற நிலைக்குழு தலைவருமான டி.ஆர்.பாலு கூறும் பொழுது கூட உதயநிதி விளையாட்டுத்தனமாக எதையாவது பேசி விடுகிறார், அவர் அவருடைய பெற்றோர் மட்டும் தான் பேச்சை கேட்கிறார், மத்தபடி சீனியர்கள் பேச்சை எல்லாம் கேட்பதில்லை அவர் இன்னும் மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும் என்கின்ற ரீதியில் பேசினார்.
அதன் பின்னணியிலும் சனாதன பேச்சு தான் பிரதானமாக கூறப்பட்டது, ஏனெனில் திமுகவில் சனாதனத்தை ஒழிப்பேன் என கூறிக்கொண்டு I.N.D.I கூட்டணியில் இருந்து வருவது சிக்கலை ஏற்படுத்தும் இது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட மதத்தை குறித்து நாம் பேசக்கூடாது என திமுகவில் இருக்கும் சீனியர்கள் இந்த விவகாரத்தில் அதிருப்தியில் இருப்பதாக வேறு தகவல்கள் வெளியானது, இந்த நிலையில் மீண்டும் சனாதன பேச்சை உதயநிதி கையில் எடுத்துப் பேசி உள்ளார்.
இப்படி சனாதனத்தை பற்றி பேசக்கூடாது என முதல்வர் சொல்லியும், திமுகவில் இருக்கக்கூடிய சீனியர்கள் சொல்லியும் மீண்டும் உதயநிதி அதனை கேட்காமல் பேசி வருவது தற்பொழுது திமுகவிற்கு உள்ளே பிரச்சனை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து திமுக தலைமை மற்றும் திமுகவின் சீனியர்கள் என்ன விளக்கம் கொடுக்கப் போகின்றனர் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது, இது மட்டுமல்லாமல் INDI கூட்டணியில் இருந்தும் இதற்கான பின் விளைவுகள் ஏற்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.