டீசருக்கே பயந்தா எப்படி..? முன்னாள் திமுக எம்.எல்.ஏ'வை பாஜகவிற்கு தூக்கிய அண்ணாமலை...!
By : Mohan Raj
சத்தம் இல்லாமல் அண்ணாமலை அடித்த அடியில் அலறிய அறிவாலயம்...!
என் மண் என் மக்கள் யாத்திரை மூன்றாம் கட்டமாக துவங்கி தற்பொழுது இரண்டு தினங்களாக நடந்து வருகிறது. இதுவரை என் மண் என் மக்கள் யாத்திரை தென் பகுதியில் குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் நடந்து வந்தது.
இப்படி நடந்து வந்த யாத்திரையில் பல பகுதிகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பாஜகவிற்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்ததும், அதிக அளவில் இளைஞர்கள் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டதும் நடந்தேறியது.
இது மட்டுமல்லாமல் ஆளும் கட்சி கூட்டம் நடத்தினாலே கூட தற்பொழுது இந்த அளவிற்கு கூட்டம் சேருவதில்லை, ஆனால் ஒரு தேசிய கட்சி அதுவும் தமிழகத்தில் இதுவரை பெரும்பான்மையான வாக்குகளை பெறாத கட்சி தற்பொழுது நடைபண யாத்திரை நடத்துகிறது ஆனால் அதற்கு இவ்வளவு கூட்டமா என திமுக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களே கூறி வந்தனர்.
இது மட்டுமல்லாமல் முதல் முறை வாக்காளர்கள் குறிப்பாக 18 முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் அனைவரும் இந்த யாத்திரையில் பெருமளவில் வந்து சேர்ந்ததும் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டதும் நடந்தேறியது. இப்படி ஆளும் கட்சியான திமுகவின் தூக்கத்தை கெடுத்த இந்த யாத்திரையில் அவ்வப்போது பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் திமுகவிற்கு மேலும் மேலும் நடந்து வருகின்றன, அந்த வகையில் திமுகவின் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தது அறிவாலயத்தை கிடுகிடுக்க வைத்துள்ளது.
1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பழனி தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட பூவேந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சட்டமன்ற உறுப்பினராக 5 ஆண்டுகள் செயல்பட்டார். இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
இப்படி அந்த பகுதியில் முக்கிய அரசியல் பிரமுகராக விளங்கும் முன்னாள் திமுக எம்எல்ஏ பூவேந்தன் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் இணைந்தது கண்டிப்பாக அரசியல் மாற்றம் தான் எனவும் இது பாஜகவிற்கு தமிழகத்தில் அதுவும் குறிப்பாக அண்ணாமலை பாதயாத்திரை செல்லும் இடங்கள் எல்லாம் ஆதரவு அதிகரித்து வருகிறது என்பதை காட்டுகிறது என அரசியல் விமர்சனங்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பதிவில் பழநி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அண்ணன் திரு ஆயக்குடி தா. பூவேந்தன் அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நல்லாட்சியாலும், தலைமைப் பண்புகளாலும் ஈர்க்கப்பட்டு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் அண்ணன் திரு பழனி கனகராஜ் முன்னிலையில், கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார் என தெரிவித்துள்ளார். மேலும் அண்ணன் பூவேந்தன் அவர்களை மனமார வரவேற்று மகிழ்கிறோம். அவரது வருகை, தமிழக பாஜகவிற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் கமலாலயத்தில் ஒரு சிலரிடம் பேசிய பொழுது இதைவிட இன்னும் பல மாவட்டங்களில் பல அதிர்ச்சிகளை ஆளும் கட்சி தரப்பிற்கு தருவதற்கு தயாராக இருக்கிறோம், போகப் போக பாருங்கள் இன்னும் அதிகளவில் பாஜகவில் பிற கட்சியினர் இணைவார்கள்! பொறுத்திருந்து பாருங்கள் என்னவெல்லாம் அரசியலில் மாற்றம் நடக்கிறது இந்த நடை பயணத்தின் மூலமாக என பாஜக நிர்வாகிகள் கூறியதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்னும் யாத்திரை 70 சதவிகித தமிழகத்தில் இனிதான் நடக்கப்போகிறது, இனி இந்த யாத்திரை விறுவிறுப்பாக நடைபெறும் அதுமட்டுமில்லாமல் கண்டிப்பாக இன்னும் பல தரமான சம்பவங்கள் நடைபெறும் எனவும் கூறுகின்றனர்.