திமுக ஐடி விங் செயலுக்கு பதிலடி கொடுத்த ஆர் எஸ் எஸ்!
By : Sushmitha
கடந்த 22 ஆம் தேதி தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக வின் சமூக வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ பக்கமான ஐடி வின் தனது எக்ஸ் பக்கத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாத செயலை செய்தவன் ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சே. அமைதியின் வடிவமாக உள்ள மகாத்மா காந்தியை படுகொலை செய்து நாட்டின் அமைதியை சீர்குலைத்த பயங்கரவாத அமைப்பான ஆர் எஸ் எஸ் என்று தலைப்பிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டது.
இந்த பதிவு ஆர் எஸ் எஸ் அமைப்பினரை கடும் கோபப்படுத்தியதுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பை குறி வைத்து உள்நோக்கத்துடனும் மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை திமுகவின் ஐடி வின் பதிவிட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காக 1948 ஆம் ஆண்டு காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட பொழுது ஆர் எஸ் எஸ் அமைப்பை காங்கிரஸ் தடை செய்தது.
ஆனால் காந்தியடிகளின் கொலைக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட பிறகு தடை நீக்கப்பட்டது, இருப்பினும் தற்போது திமுகவின் ஐ டி வின் இந்த பதிவை பதிவிட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பையும், உடனடியாக இந்த பதிவை நீக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் திமுக ஐடி வின் மீது சட்டரீதியான நடவடிக்கை பாயும் என ஆர் எஸ் எஸ் அமைப்பின் தென் பாரத செயலாளர் ராஜேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Source - Dailythanthi