சென்னை-நெல்லை வந்தே பாரத் வர மூலக்காரணம் யார்..! பலர் ஸ்டிக்கர் ஓட்டும் வேளையில் கிடைத்த முக்கிய தகவல்கள்...
By : Mohan Raj
நெல்லை - சென்னை வந்தே பாரத் கிடைக்க முக்கிய காரணம் யார்...? கசிந்த முக்கிய தகவல்கள்...!
அதிவேகத்தில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் ஒரு சொகுசுப் பயணம் என்கிற அடிப்படையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 25 வழிதடங்களில் 50 ரயில்கள் இயங்கி வருகின்றது. இந்த நிலையில் மேலும் 9 புதிய ரயில்கள் இயங்க துவங்கியுள்ளது மத்திய அரசு. தமிழ்நாட்டில் நெல்லை - சென்னை வழித்தடம் உட்பட மொத்த 11 மாநிலங்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும். இந்த ஒன்பது ரயில்களின் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நேற்று மதியம் 12:30 மணிக்கு தொடங்கிவைத்தார்.
நெல்லை சென்னை வழித்தடம் தவிர உதய்ப்பூர்- ஜெய்ப்பூர் , ஹைதராபாத்- பெங்களூரு, விஜயவாடா - சென்னை பாட்னா - ஹவுரா , காசர்கோடு- திருவனந்தபுரம் ரூர்கேலா - புவனேஸ்வர் பூரி - ராஞ்சி, ஜாம்நகர்- ஆமதாபாத் ஆகிய வழித்தடங்களில் புதிய ரயில்கள் இயங்குகின்றன. இதன் மூலம் தமிழ்நாடு இராஜஸ்தான், தெலுங்கானா , ஆந்திரா, கர்நாடகா பீகார் , மேற்கு வங்காளம், கேரளா, ஒடிசா ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்கள் பயன்படுத்துகிறது.
ஹைதராபாத் பெங்களூர் ரயில் இரண்டரை மணி நேரமும் நெல்லை - மதுரை - சென்னை ராஞ்சி- ஹவுரா ரயில்சுமார் 2 மணி பாட்னா ஹவுரா ரயில் மற்றும் ஜாம்நகர் ஆமதாபாத் ரயில் ஆகியவை சுமார் ஒரு மணி நேரமும் உதய்பூர்-ஜெய்ப்பூர் ரயில் சுமார் அரை மணி நேரமும் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களை விட வேகம் கொண்டதாக இருக்கும். இந்த ரயில்கள் பூரி ஜெகநாதர், திருப்பதி ஏழுமலையான், மதுரை மீனாட்சி கோவில் போன்ற முக்கிய வழிபாட்டு தலங்களை இணைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி துவங்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் முக்கியமான ரயிலாக பார்க்கப்படுவது திருநெல்வேலி முதல் சென்னை வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் தான், இந்த ரயிலில் மாநில தலைநகர் சென்னையிலிருந்து கிளம்பி திருநெல்வேலி வரை செல்லும் செல்வதால் விழுப்புரம், திருச்சி, மதுரை என தமிழகத்தின் முக்கிய நகரங்களை கடந்து செல்கிறது. அது மட்டும் அல்லாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் சென்று வரக்கூடிய வழித்தடம் என்பதால் இந்த ரயில் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடமாக பார்க்கப்படுகிறது.
இதனால் நேற்று இந்த ரயில் திறப்பு விழாவை தமிழக முழுவதும் குறிப்பாக சென்னை முதல் நெல்லை வரை இருக்கும் ரயில்வே வழித்தடத்தில் உள்ள அனைத்து ஊர் மக்களும் இதை கோலாகலமாக கொண்டாடினார்கள். காரணம் இந்த ரயிலை பயன்படுத்தினால் பயண நேரம் மிச்சமாகும் இன்னும் பல வசதிகள் இருக்கும் என்பதால் இந்த வந்தே பாரத் ரயிலை தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் கொண்டாடினார்கள். இப்படி இந்த மக்கள் கொண்டாடுவதை பார்த்த திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த சில குறிப்பாக மதுரை எம்.பி சு வெங்கடேசன், விழுப்புரம் எம் பி ரவிக்குமார், சிதம்பரம் எம்பி திருமாவளவன் ஆகியோர் வந்தே பாரத ரயிலுக்கு நாங்களும் ஒரு விதத்தில் காரணம் என்பது போன்று தங்களது சமூக வலைதள பதிவுகளில் பதிவிட ஆரம்பித்துவிட்டனர்.
குறிப்பாக எல்லாவற்றிற்கும் முன்னாடி வந்து கருத்து சொல்லும் கம்யூனிஸ்ட் எம்.பி வெங்கடேசனும் இந்த ரயில் வர நானும் காரணம் எனவும், என்னால்தான் இந்த ரயிலே வந்தது என்கின்ற ரீதியில் தனது சமூக வலைதளத்தில் விளம்பரங்களை செய்து கொண்டார். கூடவே வந்த எம்.பி திருமாவளவன் இந்த ரயிலை கொடி அசைத்து துவக்கி வைத்தது மட்டுமல்லாமல் அந்த ரயில் பயணம் செய்ததும், மேலும் அந்த ரயிலில் பயணம் செய்பவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்ததையும் தனது சமூக வலைத்தளத்தில் பெருமையாக பகிர்ந்துகொண்டார்.
இவர்கள் இருவரும் செய்வதை பார்த்து விழுப்புரம் எம்பி ஆன ரவிக்குமார் இந்த ரயில் வரும் என எனக்கு தெரியும் அப்படி வரும் என தெரிந்து விழுப்புரத்தில் நிற்க வேண்டும் என நான் தான் ஒரு கோரிக்கையை வைத்தேன் என்றார். சென்னை முதல் திருச்சி, மதுரை, திருநெல்வேலி வரை செல்லும் ரயிலின் முக்கிய நிறுத்தமாக விழுப்புரம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். இப்படி விழுப்புரம் இருப்பது அனைவருக்கும் தெரியும் என விழுப்புரம் ரவிக்குமார் எம்பிக்கும் தெரியும், மேலும் எப்படியும் வந்தே பாரத் போன்ற முக்கியமான ரயில்கள் விழுப்புரத்தில் நிற்காமல் செல்வதற்கு வாய்ப்பே இல்லை எப்படியும் நிற்கும் என தெரிந்து இந்த ரயிலை நான் தான் கோரிக்கை கொடுத்து நிறுத்தினேன் என விழுப்புரம் எம்பி ரவிக்குமார் அவரது பங்குக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டார்.
இப்படி ஆளாளுக்கு சென்னை-நெல்லை வந்தே பரத் ரயில் காரணம் நாங்கள் தான் காரணம் என ஸ்டிக்கர் ஒட்டும் நிலையில் இந்த வந்தே பாரத் ரயிலை பற்றி அறிமுகம் மற்றும் அதன் வழித்தடம் முடிவு செய்யப்பட்டது போன்ற சில தகவல்களை விசாரித்தோம். அப்படி விசாரிக்கும் போது பல சுவாரஸ்யமான தகவல்கள் நமக்கு கிடைத்தன, குறிப்பாக கூற வேண்டும் என்றால் இந்த வந்தே பாரத் முதலில் முடிவு செய்யப்பட்டது சென்னை முதல் மதுரை வரை தான். சென்னை முதல் மதுரை வரை இந்த வந்தே வாரத்தில் முடிவு செய்யப்பட்டு இயக்கப்படும் என ரயில்வே துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அப்படி இருக்கும் சூழலில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டார். அதே விழாவில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியும் கலந்து கொண்டார். அப்பொழுது இந்த வந்தே பாரத் ரயில் குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இதுபோன்ற சென்னை முதல் மதுரை வரை வரவிருக்கும் வந்தே பாரத் ரயிலை திருநெல்வேலி வரை இயக்கினால் பொதுமக்கள் நிறைய பேர் பயனடைவார்கள் அது மட்டுமல்லாமல் திருநெல்வேலி என்பது எங்களது பூர்வீகம் அங்கிருந்து நிறைய பேர் மதுரை, திருச்சி, விழுப்புரம் சென்னை போன்ற நகரங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இந்த வந்தே பாரத் ரயில் வரும்பட்சத்தில் மக்கள் சொகுசான மற்றும் நேரம் குறைந்த பயணத்தை மேற்கொள்ள முடியும் இது எங்கள் பகுதிக்காக நான் வைக்கும் வாய்மொழி கோரிக்கை என பர்சனலாக கோரிக்கை வைத்தாராம்.
இந்த கோரிக்கையை அப்பொழுது கேட்டுக் கொண்ட மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நான் எனது அதிகாரிகளிடம் சொல்லி அதற்கான நடவடிக்கைகளை எடுத்துச் சொல்கிறேன் என வாய்மொழி உத்தரவை பிறப்பித்தார் என கூறப்படுகிறது.
அதன் பிறகு இந்த வந்தே பாரத் ரயில் நெல்லை வரை நீட்டிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு அறிவிப்பும் வெளியானது, இப்படி சென்னை முதல் மதுரை வரை வரவிருந்த வந்தே பாரத் ரெயிலை சென்னை முதல் நெல்லை வரை கொண்டு வந்த பெருமை மற்றும் மூல காரணம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களையே சேரும், அப்படி அவர் செய்த காரியம், அன்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் வைத்த கோரிக்கை, தான் ஒரு ஆளுநர் என்பதையும் விட்டு நெல்லையை சேர்ந்த மகள் என்பதை மனதில் வைத்து கேட்ட அந்த ஒரு வார்த்தை தான் இன்று இந்த ரயில் வருவதற்கு காரணமாக அமைந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் ஏதோ மத்திய அமைச்சரிடம் நேரடியாக சென்று சில எம்பிக்கள் முறையிட்டது போலவும் அந்த எம்பிக்கள் கோரிக்கையை வைத்து தான் இந்த வந்தே பாரத் ரயில் சென்னை முதல் நெல்லை வரை வருவதற்கு காரணம் எனவும் சில எம்பிக்கள் குறிப்பாக திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.பிக்களான சு.வெங்கடேசன், திருமாவளவன், ரவிக்குமார் போன்றோர் மார்தட்டிக் கொள்வது நகைச்சுவையாக இருக்கிறது எனவும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளது.