சொன்னார் மோடி.. செய்தார் சூப்பர் ஸ்டார்..! வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறும் இடதுசாரிகள்...!
By : Mohan Raj
இதுதான் சூப்பர் ஸ்டார்...! சொன்னார் மோடி களம் இறங்கினார் சூப்பர் ஸ்டார்..!
கடந்த மன் கி பாத் நிகழ்ச்சியின் 105வது எபிசோடின் போது, பிரதமர் மோடி, "அக்டோபர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தூய்மை குறித்த பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீங்களும் நேரம் ஒதுக்கி, தூய்மை தொடர்பான பிரச்சாரத்திற்கு உதவுங்கள். உங்கள் தெரு, அல்லது சுற்றுப்புறம் அல்லது பூங்கா, ஆறு, ஏரி அல்லது வேறு எந்த பொது இடத்திலும் இந்தத் தூய்மைப் பிரச்சாரத்தில் நீங்கள் சேரலாம்' என கூறினார்.
நாடு முழுவதும் உள்ள மக்களை அக்டோபர் 1 ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கும் தூய்மை இயக்கத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வச் பாரத் என்பது பகிரப்பட்ட பொறுப்பு என்றும், இதற்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியும் மதிப்புமிக்கது என்றும் கூறினார். பின்னர் இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிடும் போது, "அக்டோபர் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு, நாங்கள் ஒரு முக்கிய தூய்மை முயற்சிக்காக ஒன்று கூடுகிறோம். ஸ்வச் பாரத் என்பது பகிரப்பட்ட பொறுப்பு, மேலும் ஒவ்வொரு முயற்சியும் மதிப்புள்ளது. தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க இந்த உன்னத முயற்சியில் சேருங்கள்" என்று பிரதமர் மோடி பதிவிட்டார்.
இதனைத்தொடர்ந்து இன்று நாடு முழுவதும் தூய்மை இயக்கத்தை வலு சேர்க்கும் விதமாக அரசு அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது சேவை செய்வோர், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவராலும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பூங்காக்கள், சாலைகள், கடற்கரை ஓரங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் பிரதமர் கேட்டுக் கொண்டதற்காக தூய்மை இயக்கத்தில் ஈடுபட்டு ஒன்றிணைந்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடியின் தூய்மை பணி மேற்கொண்டார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தடகள வீரர் அங்கீத் என்பவருடன் தூய்மை பணி மேற்கொண்ட பிரதமர் மோடி கூறும்போது, 'உண்பதற்கும், உறங்குவதற்கும் போதிய நேரம் ஒதுக்க முடியவில்லை எனவும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று தூய்மையே சேவை என்ற இயக்கம் கடைபிடிப்பு எனவும் கூறினார்.
இதற்கு ஆதரவு சேர்க்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் களமிறங்கியுள்ளார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளமான எக்ஸ் பதிவில் 'ஆரோக்கியமான சூழல், தூய்மையான சூழலுடன் துவங்குகிறது. இந்தியாவை சுத்தமாக வைத்திருப்போம்' எனக்கூறி ஸ்வச் பாரத் என்ற ஹெஷ்டேகுடன் உடன் ஸ்வச் பாரத் இயக்கத்தின் சமூக வலைதள ஐடியை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.
இது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது, கடந்த சில நாட்களாக தமிழக கர்நாடகா எல்லையில் பதற்றம் மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக சூப்பர் ஸ்டார் ஏன் குரல் எழுப்பவில்லை என இடதுசாரிகள் தொடர் கேள்விகளாக எழுப்பி வந்தனர்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசு சூப்பர் ஸ்டார் காவிரி விவகாரத்தில் ஏன் பேசாமல் இருக்கிறார்? என கேள்வி எழுப்பினார் இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களே காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு கேட்ட திருமாவளவனே அமைதியாக இருக்கும் பொழுது அரசியலில் சம்மந்தம் இல்லாத சூப்பர் ஸ்டார் அமைதியாக இருப்பதில் ஆச்சரியம் என்ன என பதில் கேள்வி எழுப்பினர்.
இதனை தொடர்ந்து வன்னியரசு அமைதியாகிவிட்டார், இப்படி சூப்பர் ஸ்டார் குரல் எழுப்பவேண்டும் அதனை வைத்து சர்ச்சைகளை ஏற்படுத்தலாம் என இடதுசாரிகள் எதிர்பார்த்து வந்த நிலையில் அவர்கள் வாயடைக்கும் விதமாக காவிரி விவகாரத்தில் எதுவுமே கூறாமல் இருந்த சூப்பர்ஸ்டார் தற்போது பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக குரல் எழுப்பி இருப்பது இடதுசாரிகளுக்கு மீண்டும் வயித்தெரிச்சலை கிளப்பி உள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
தொடர்ந்து இடதுசாரிகளை புண்படுத்திக் கொண்டே இருக்கிறார் சூப்பர் ஸ்டார் என இணையத்தில் கமெண்ட்கள் பறக்கின்றன.