Kathir News
Begin typing your search above and press return to search.

மொத்தமும் போகப்போகுது..! மாவட்ட செயலாளர்களிடம் முதல்வர் கடுப்படித்த பின்னணி..!

மொத்தமும் போகப்போகுது..! மாவட்ட செயலாளர்களிடம் முதல்வர் கடுப்படித்த பின்னணி..!

Mohan RajBy : Mohan Raj

  |  3 Oct 2023 10:13 AM GMT

கூட்டத்தில் மிரட்டிய முதல்வர் ஸ்டாலின்...! தோல்வி பயத்தின் வெளிப்பாடா?

இன்னும் ஐந்து மாத காலத்தில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் அதற்கான அரசியல் கள வேலைகளை அனைத்துக் கட்சிகளும் பரபரப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை அதுவும் கடந்த ஒரு வார காலமாக அதிமுக பாஜக கூட்டணி முறிந்ததிலிருந்து அரசியல் வேலைகள் படு வேகமாக நடைபெற துவங்கிவிட்டன, ஆளும் திமுக தரப்பிலிருந்து I.N.D.I கூட்டணி கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவது மேலும் வாக்குச்சாவடி முகவர்களை அழைத்து என்ன செய்ய வேண்டும் என கூறுவது போன்ற வேலைகளை துவங்கிவிட்டது.

குறிப்பாக நேற்று கூட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுகவினருக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளிவரும் அதனை சரிபார்க்கும் பணிகளை உடனே துவங்க வேண்டும் எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்றது.

மண்டல வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் திமுக சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது, இந்த கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது..

” விரைந்து செயல்பட வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். அதனால்தான் உடனடியாக காணொலி வாயிலாகக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பணி நம்மை எதிர்நோக்கி வந்துகொண்டிருக்கின்றது.

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தோல்வியடைந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன். தேர்தல் பணிகளில் தொய்விருந்தால் மூத்த நிர்வாகி, அமைச்சர் என யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்.

தொகுதி பார்வையாளர்கள் வாரத்திற்கு ஒருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு சென்று நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் “ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னணியை அரசியல் விமர்சகர்களிடம் விசாரித்த பொழுது இந்த தேர்தல் திமுகவிற்கு சவாலான தேர்தலாகும் முதல்வர் மூன்று வருட ஆட்சியின் முடிவு எப்படி இருக்கிறது என்பதை மக்கள் கொடுக்கும் தீர்ப்பாக இந்த தேர்தல் அமையும், இந்த தேர்தலில் ஆளும் பாஜக தரப்பு மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன, இது மட்டுமல்லாமல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேறு நடை பயணம் சென்று மத்திய அரசு செய்துள்ள நலத்திட்டங்கள் பற்றி கூறியது மட்டுமல்லாமல் ஆளும் திமுக அரசு என்னென்ன தவறுகள் செய்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

இப்படி தொடர்ச்சியாக திமுக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டு வரும் நிலையில் வரும் தேர்தலில் திமுகவிற்கு வெற்றி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதோ? எனவும் சந்தேகத்தை எழுப்பினார்கள் அரசியல் விமர்சகர்கள்.

மேலும் முதல்வர் ஸ்டாலின் இப்பொழுது நடைபெறவிருக்கும் ஆட்சியின் வெளிப்பாடுதான் இந்த தேர்தல் என்பதை நன்கு உணர்ந்த காரணத்தினாலேயே இந்த தேர்தலில் தோற்றால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்படி வெளிப்படையாக கூறியுள்ளார். இதன் காரணமாக திமுகவினர் இன்னும் அதிக ஈடுபாட்டுடன் வேலை செய்வார்கள் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

மேலும் வரும் தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சிகள் வேறு பிரிந்துசெல்ல வாய்ப்புகள் இருக்கும் என்ற தகவல் வேறு முதல்வரை கோவப்படுத்தியுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News