பிணவறையில் மூட்டை மூட்டையாக பணம்...! திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் 'சிவாஜி' பட வேலைகள்...!
By : Mohan Raj
வசமாக சிக்கிய திமுக எம்பி! அள்ள அள்ள வந்த கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள்!
ஒவ்வொரு மாதம் முக்கிய செய்தியாக திமுக அமைச்சர்கள் மீது வருமானவரித்துயோ அல்லது அமலாக்க துறையோ நடத்தும் சோதனை தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜி ஸ்கொயர் நிறுவன ரெய்டும் திமுகவின் அதிகார மையத்திற்கு சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டது.
அதற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை மேற்கொண்ட ரெய்டு மூலம் தற்போது அவர் ஜாமீன் கூட கிடைக்க முடியாத அளவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எப்படியும் திமுக தலைமை நம்மை வெளியே எடுத்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்து கொண்டிருக்கும் செந்தில் பாலாஜி ஏமாற்றத்திலும் அடுத்து அவரது சகோதரர் சரணடைந்து தன்னை காப்பாற்றுவாரா என்ற ஏக்கத்தில் இருந்து வருவதாக சிறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இவரைத் தொடர்ந்து அடுத்ததாக அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரையும் அவரது மகனையும் அழைத்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு திமுகவின் எம்பி ஆக உள்ள ஜெகத்ரட்சகன் தொடர்புடைய வீடு அலுவலகங்கள் ஹோட்டல் மேலும் அவரது உறவினர்கள் என தமிழக முழுவதும் சுமார் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட ரூபாய் 50 ஆயிரத்து 219. 37 கோடி சொத்து மதிப்புகளை கொண்ட நபர் இந்த எம்.பி ஜெகத்ரட்சகன் என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமின்றி அவரது தொழிலாக ஹோட்டல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் என ஏராளமான தொழில்களுக்கு சொந்தக்காரராக உள்ளார். இப்படி கடந்த நான்கு நாட்களாக வருமானவரித்துறை மேற்கொண்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களும் சொத்து மதிப்பு அல்லது ஆவண விவரங்கள் எதுவும் வருமானவரித்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக வெளிவராமல் இருந்தது. ஆனால் சோதனை நடத்தப்படும் இடங்களில் அதிகாரிகள் பணம் எண்ணும் இயந்திரத்தை எடுத்துச் சென்ற தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், திமுக எம்பி தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் 1.5 கோடியை பறிமுதல் செய்ததாகவும், அதற்குப் பிறகு 2.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த செய்திகளின் ஆச்சரியம் அடங்குவதற்குள் ஜெகத்ரட்சகன் தொழில் நிறுவனமான சவிதா கல்வி குழுமம் தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தற்போது அதில் கூடுதலாக இரண்டு கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஆக மொத்தம் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தொகைகளில் மொத்த விவரம் 16 கோடியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரியை சேர்ந்த பிணவறையில் மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்டது என்ற தகவலும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மணல் ரெய்டு நடைபெற்ற நிலையில் அடுத்த திமுக வின் முக்கிய தலை சிக்கும் என்ற தகவல் திமுக தலைமையை அதிர வைத்த நிலையில் தற்போது எம்.பி ஜெகத்ரட்சகன் வசம் நடத்தப்பட்ட இந்த ரெய்டில் கோடி கணக்கிலான ரூபாய் நோட்டுகள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டு வரும் செய்தியால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திமுக தலைமை திக்குமுக்காடி உள்ளது என கூறப்படுகிறது. மேலும் விரைவில் அடுத்த அமைச்சர் சிக்குவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.