Kathir News
Begin typing your search above and press return to search.

செவிலியர்களுக்காக குரல் கொடுத்த அண்ணாமலை!

செவிலியர்களுக்காக குரல் கொடுத்த அண்ணாமலை!
X

SushmithaBy : Sushmitha

  |  11 Oct 2023 8:29 AM IST

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை தமிழக காவல்துறை கைது செய்ததை கண்டித்து செவிலியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, ஒவ்வொரு துறையிலும் வாக்களித்த மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. திமுக வாக்குறுதி எண் 356ல், ஒப்பந்த நியமன முறையில் பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறி, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும், அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் துரோகம் செய்திருக்கிறது.

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்திய செவிலியர்களை, காவல்துறையை ஏவி, சமூக விரோதிகளைப் போல அடாவடியாகக் கைது செய்திருக்கிறது திமுக அரசு. ஏற்கனவே, வாக்குறுதி எண் 181ல், பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறி ஏமாற்றி, அவர்களையும் கைது செய்திருந்தது.

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியதைத் தவிர, இவர்கள் செய்த தவறென்ன? உடனடியாக, கைது செய்தவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென்றும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த மக்களுக்கு இனியும் துரோகம் செய்யக் கூடாது என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News