Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த அடி அறிவாலயம்தான்...! உடன்பிறப்புகளுக்கு இடியாய் இறங்கிய அந்த தகவல்...!

அடுத்த அடி அறிவாலயம்தான்...! உடன்பிறப்புகளுக்கு இடியாய் இறங்கிய அந்த தகவல்...!

Mohan RajBy : Mohan Raj

  |  11 Oct 2023 2:40 PM GMT

இனி வேலைக்காகாது...! அடுத்த கட்டம் வேற மாதிரி தான் இறங்கணும்...! தீயாக ஸ்கெட்ச் போட்ட ஆசிரியர் சங்கத்தினர்...!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆசிரியர்கள் திமுக அரசுக்கு எதிராக சந்திப்புகள், கூட்டங்கள், கோரிக்கைகள் என பலவற்றை முன்வைத்து வந்தனர். ஆனால் திமுக அரசு அதனை எதுவும் காது கொடுத்து கேட்கவில்லை என ஆசிரியர் சங்கங்கள் சார்பில் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆசிரியர் சங்கம் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது, ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புகள் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்திய போது அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஆசிரியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியது மட்டுமல்லாமல் ஆசிரியரின் கோரிக்கைகளை அப்படியே வாங்கி திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெறுமாறு செய்தார். அதன் விளைவாக திமுக ஆட்சிக்கு வந்தால் நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும், திமுக ஆட்சிக்கு வந்தால் நமக்கு அனைத்தும் கிடைத்துவிடும் என்ற ஆசையில் ஆசிரியர் சங்கங்கள் அனைத்தும் திமுக அரசுக்கு ஓட்டு போட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக ஆசிரியர் சங்கம் செயல்பட்டு திமுகவிற்கு வெற்றி வாய்ப்பை தேடி தந்ததன் விளைவாக திமுக ஆட்சி அமைந்த உடன் சிறிது காலத்திற்கு திமுக அரசு அமைந்துவிட்டது, நம்மளுடைய வாக்குறுதி கோரிக்கை எப்படியும் நிறைவேற்றப்படும் என ஆசிரியர்கள் கனவில் இருந்து வந்தனர்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல திமுக அரசு வாக்குறுதியை நிறைவேற்றப்போவதில்லை என்பதை உணர்ந்த ஆசிரியர்கள் மெதுவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை டி.பி வளாகம், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு 50க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடந்துள்ளதாக ஆசிரியர் சங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் முக்கிய போராட்டமாக கடந்த மாதம் 28ஆம் தேதி துவங்கி ஒன்பது நாட்களாக சென்னை டி பி ஐ வளாகத்தில் தொடர் போராட்டம் அரசுக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் சிக்கல் ஏற்படுத்தும் வகையில் நடந்தது. அந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது முதல்வர் வந்து எங்களை பார்க்கவில்லை என ஆசிரியர் சங்கத்தினர் கூறினார்கள், இது மட்டுமல்லாமல் போராட்டம் நடந்த ஐந்து நாட்கள் கழித்து தான் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் போராட்டக்காரர்களை அழைத்து பேசினார்.

இதுவே ஆசிரியர்களுக்கு இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது குறிப்பாக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது நாங்கள் போராட்டம் என அறிவித்தாலே எங்களை பார்க்க வந்து விடுவார் திமுக தலைவர் ஆனால் ஆளுங்கட்சி ஆன பிறகு இத்தனை நாட்களாக போராடி வருகிறோம் முதல்வர் ஸ்டாலின் அதை கண்டு கொள்ளவே இல்லை என ஆசிரியர்கள் கடும் கோபத்தில் இருந்து வந்தனர்.

போராட்டம் எட்டாம் நாளை தாண்டி 9 ஆம் நாள் நடைபெற்று வந்த நிலையில் ஆசிரியர்கள் கலந்து செல்ல போவதில்லை என அறிந்த காரணத்தினால் அவர்களை கலைந்து செல்ல அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது, அந்த எச்சரிக்கையின் மீறி கலைந்து செல்லாத ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குண்டு கட்டாக வாகனங்களில் ஏற்றப்பட்டு சென்னையை விட்டு போலீஸாரால் வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் திமுக மீது ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர், இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களது சங்கங்களின் வெளியே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர், இனி வரும் காலங்களில் டிபிஐ வளாகத்தில் போராடினால் அது சரியாக இருக்காது இனி 'திமுகவின் தேர்தல் வாக்குறுதி எங்கே?' என கேட்டு அண்ணா அறிவாலயம் முன்புதான் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்துள்ளனர்.

குறிப்பாக லோக்சபா தேர்தலின் போது திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தொடர் போராட்டத்தை அறிவாலயம் முன்பு நடத்த முடிவு செய்துள்ளனர் ஆசிரியர் சங்கங்கள், இது குறித்து கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ஆசிரியர் சங்கத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் வரும் வேலையில் ஆசிரியர் சங்கம் அறிவாலயத்தின் முன்பு உட்கார்ந்து போராடினால் நமக்கு அது மேலும் பின்னடைவு தான் என திமுக தரப்பு தற்போது அரண்டுபோய் உள்ளது என அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News