மகளிர் உரிமை மாநாடு அல்ல; மகளிர் வாரிசு உரிமை மாநாடு! வானதி சீனிவாசன் கண்டனம்!
By : Sushmitha
முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு மகளிர் உரிமை மாநாடு சென்னையில் நந்தனம் ஒய் எம் சி ஏ திடலில் திமுக மகளிர் அணி சார்பாக இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் I.N.D.I.A கூட்டணியின் முக்கிய பெண் தலைவர்கள் பங்கு பெற்றுள்ளனர் இந்த மாநாடு குறித்து தமிழக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மகளிர் உரிமை மாநாடு அல்ல மகளிர் வாரிசு உரிமை மாநாடு என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும்,
திமுக மகளிரணி சார்பில் சென்னையில் இன்று மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருமதி சோனியா காந்தி, அவரது மகள் திருமதி பிரியங்கா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் திருமதி சுப்ரியா சுலே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் திருமதி மெகபூபா முப்தி, இந்திய கம்யூனிஸ்ட் தேசியப் பொதுச்செயலாளர் திரு. டி.ராஜாவின் மனைவி திருமதி ஆனி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் அரசியல் வாரிசுகள். மகளிர் உரிமை மாநாடு என்ற பெயரில் மகளிர் வாரிசு உரிமை மாநாட்டை நடத்துகின்றனர். வாரிசு அரசியலில் கூட, பெண்களை பின்னுக்குத்தள்ளி, தங்கள்து ஆண் வாரிசுக்குதான் முக்கியத்துவம் அளிப்பதுதான் இண்டி கூட்டணி கட்சிகளின் அரசியல் பாரம்பரரியம். நீண்டகால அரசியல் அனுபமும், திறமையும் கொண்ட கனிமொழி, திமுகவில் இப்போது எந்த இடத்தில் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். திமுகவுக்கு உள்ளேயே தனது உரிமைக்காக போராட வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார். மகள் இருந்தும் மகன் உதயநிதியை தான் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அரசியல் வாரிசாக்கியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
Source - Dinamalar