இதுதான் சமூக நீதியா...? செம்மையா இருக்கே...! மீண்டும் கப்பலேறிய அறிவாலய மானம்...!
By : Mohan Raj
இதுதான் சமூக நீதியா...? நல்லா இருக்கு உங்க சமூக நீதி..! அம்பலமான திமுக நாடகம்..!
கடந்த ஜனவரி மாதம் சேலம் திருமலைகிரியில் கோவிலுக்குள் சென்ற பட்டியல் சமூக இளைஞரை ஊர் மத்தியில் நிற்க வைத்து அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி திமுக ஒன்றிய செயலாளர் அவமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த பொழுது அங்கிருந்த சிலர் அந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து இணையங்களில் வெளியிட்டனர்.
அந்த வீடியோவில் சேலம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மாணிக்கம் என்பவர் கோவிலுக்குள் நுழைந்துவிட்டார் எனக் கூறி ஒரு பட்டியலின இளைஞரை ஆபாசமாக திட்டிக் கொண்டிருப்பார், கடந்த ஜனவரி மாசம் இந்த சம்பவம் நிறைவேறியது.
இப்படி அந்த சம்பவம் நடந்த சமயம் சமூக நீதி எனக் கூறும் திமுகவில் இதுபோன்று நடக்கலாமா? இதுதான் நீங்கள் சமூகநீதி பேசும் லட்சணமா? உங்கள் கட்சி நிர்வாகி ஒருவரே ஒரு பட்டியலின இளைஞரை கோவிலுக்குள் சென்றதற்காக இப்படி அவரது சமூகத்தை சொல்லி திட்டி தீர்க்கிறார் இதுதான் நீங்கள் சமூக நீதி பேசும் லட்சணமா? என கடுமையாக விமர்சனங்களை முன் வைத்தனர் பொதுமக்கள்..
இதன் காரணமாக அப்பொழுது சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கத்தை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்த பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார், இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்து சரியாக பத்து மாதங்கள் கழித்து தற்பொழுது மீண்டும் திமுக தலைமை கழகத்திலிருந்து அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் 'சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டி. மாணிக்கம் அவர்கள் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழக பணியாற்றின் அனுமதி அளிக்குமாறு கழக தலைவர் அவர்களிடம் வைத்த கோரிக்கையை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை இன்று முதல் ரத்து செய்யப்பட்டு சேலம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளராக தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி என கூறிக்கொண்டு நீங்கள் ஆடும் நாடகம் இதுதானா? என இணையத்தில் திமுகவை நோக்கி பொதுமக்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர். பட்டியலின இளைஞரை கோவிலுக்குள் விடாமல் தடுத்து வைத்துவிட்டு அவரை திட்டும்போது அவர் சேர்ந்த சமூகத்தை வேறு குறிப்பிட்டு திட்டி விட்டு அதனை மக்கள் விமர்சித்தார்கள் என்பதற்காக அவரை நீக்குவது போல் நாடகமாடி விட்டு தற்பொழுது மீண்டும் அவரை கட்சியில் சேர்த்து இருப்பது எந்த வகையில் நியாயம் என பல்வேறு விமர்சனங்கள் திமுக மீது எழுந்து வருகிறது... வழக்கம்போல் திமுக அமைதி காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது