Kathir News
Begin typing your search above and press return to search.

வேலையை காட்டிய திருமா...! சிறுத்தைகளை அடக்கிவைக்க அறிவாலயம் போட்ட ஸ்கெட்ச்..! கூட்டணி சண்டை ஆரம்பம்...!

வேலையை காட்டிய திருமா...! சிறுத்தைகளை அடக்கிவைக்க அறிவாலயம் போட்ட ஸ்கெட்ச்..! கூட்டணி சண்டை ஆரம்பம்...!

Mohan RajBy : Mohan Raj

  |  16 Oct 2023 9:43 AM GMT

முரண்டுபிடித்த சிறுத்தைகளுக்கு அசால்ட்டாக திமுக போட்ட வேற ஸ்கெட்ச்...! திருமா ஆட்டம் ஓவர்....!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களிலும் தீவிரம் அடைந்துள்ளது அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இதுவரை இல்லாத தேர்தலாக கண்டிப்பாக வரும் நாடாளுமன்ற தேர்தல் நிகழும் என்றும் அதற்கான சாத்திய கூறுகள் நிறைய இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும் கடந்த வாரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த அறிவிப்பிற்கு பிறகு திமுகவும் பதட்டத்தை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது திமுகவின் கூட்டணி கட்சிகள் தற்போது அதிமுகவில் இணைவதற்காக நேரம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் திமுகவின் கூட்டணி கட்சிகளின் சில தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் தமிழக பாஜக தரப்பில் கூட்டணி குறித்த தகவல்கள் இன்னும் வெளிவராத நிலையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நிலைமை வந்தாலும் பாஜக அதனை எதிர்கொள்ளும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். மேலும் பாஜகவின் தேசிய அமைப்பு பொது செயலர் BL சந்தோஷ் நேற்றைய முன்தினம் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் நீங்கள் யாரும் கூட்டணி பற்றி யோசிக்க வேண்டாம்! அதனை மேலிடம் பார்த்துக் கொள்ளும் கட்சியின் வளர்ச்சி பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தனித்துப் போட்டியிடும் சூழல் வந்தாலும் அதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுரைகளை தெரிவித்துள்ளார். இப்படி 2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜக தனியாக எதிர்கொள்வதற்கான வேலைகளில் தீவிரமாக தற்போது இறங்கி கொண்டிருக்கிறது.

இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தற்பொழுது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஒரு மாதத்திற்கு கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து விலகி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியிருந்தது மேலும் அவர் அதிமுகவில் இணைவதற்கான ஒவ்வொரு காய்களை நகர்த்தி வருகிறார் என்றும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் யார் மூன்று தொகுதிகளை கொடுக்கிறார்களோ அவர்களுடன் தான் விசிகவின் கூட்டணி நடைபெறும் என்பது போன்ற வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தரப்பில் விவாதிக்கப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கபடுகிறது.

இந்த தகவல் திமுகவின் தலைமைக்கு தெரிந்தும் விடுதலை சிறுத்தைகளின் முடிவுக்கு திமுக தலைமை இடத்தில் இருந்து எந்த பதிலும் வழங்கப்படாமல் இருந்ததாகவும் அந்த கோபத்தை அறிவாலயம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தின் மீது காட்டியதாகவும் அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் விசிக தனது முடிவில் முரண்டு பிடித்துவர நாளுக்கு நாள் தன் டிமாண்டுகளை திருமாவளவன் அதிகரித்தும் வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

அதனால் திமுக தலைமை தேர்தல் வரை விசிகவை நம்முடன் வைத்துக் கொண்டு இருந்தால் வேலைக்காகாது இதனால் விசிகவை கழட்டிவிட்டு அதற்கு பதிலாக பாட்டாளி மக்கள் கட்சியை இணைத்துக் கொள்ளலாம் என திமுகவில் இருக்கக்கூடிய சில சீனியர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர் என்றும் இதன் காரணமாக திருமாவளவன் போனாலும் பரவாயில்லை என அவரை விலக்கிவிட்டு பாமகாவை இணைக்க முடிவெடுத்து விட்டதாக என்றும் அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் திருமாவளவனுக்கு தெரிந்து தேர்தல் வருவதை முன்னிட்டு சீட்டு பேரம் ஆரம்பிப்பதற்கு முன்னரே இப்படி கூட்டணியில் இருந்து விலக்கப்படுவது சரியில்லை என தனது கூட்டாளிகளிடம் புலம்ப ஆரம்பித்துள்ளாராம்...

Next Story
கதிர் தொகுப்பு
Trending News