உங்க பையன் முட்டாள்தனத்துக்கு இது மாதிரி செய்யலாமா? ஆதாரத்துடன் கொதித்து வீடியோ வெளியிட்ட அண்ணாமலை...
By : Mohan Raj
உங்க பையன் அரசியல் செய்வதற்கு அரசு பள்ளிகள் தான் கிடைத்ததா...? கொதித்த அண்ணாமலை...
திமுக அரசு அமைவதற்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட்டை ரத்து செய்வதற்கு வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தால் போதும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்து நீட்டை ரத்து செய்வோம் என கூறியே பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஆனால் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகுதான் நீட்டை ரத்து செய்ய முடியாது மாநில அரசால் என தெரிந்து திமுக அமைதியாகிவிட்டது எனவும், மக்களை இதெல்லாம் தெரிந்து ஏமாற்றிவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
அதுமட்டுமல்லாமல் எங்கே ஒரு கையெழுத்தில் நீட்டை ரத்து செய்து விடுவேன் என்றீர்களே? எங்கே ரத்து செய்தீர்கள் கூறுங்கள் என எதிர்கட்சிகளும், மக்கள் மத்தியில் கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள் கடந்து ஏதாவது செய்தாக வேண்டும் 2024 நாடாளுமன்ற தேர்தல் வருகிறது என திமுகவினர் தற்பொழுது களமிறங்கியுள்ளனர் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரதம் இருந்தார், அதனை தொடர்ந்து நீட்டை ரத்து செய்ய வேண்டும் என கூறி தற்போது 50 லட்சம் கையெழுத்து இலக்காக வைத்து திமுகவினர் தரப்பில் இருந்து 50 லட்சம் கையெழுத்து பெறப்படுகிறது.
இந்த 50 லட்சம் கையெழுத்திற்க்கு ஏற்கனவே மாநில பாஜக மாநில தலைவர் அண்ணாமலை '50 லட்சம் கையெழுத்து வாங்க முடியவில்லை என்றால் நீங்கள் வீட்டிற்கு சென்று விடலாம், 50 லட்சம் கையெழுத்தை வாங்குவதெல்லாம் ஒரு சாதனையா?' என விமர்சனத்தை வைத்திருந்தார்.
இந்த நிலையில் ஒரு பகிர் வீடியோ ஒன்று வெளியானது, அதனை அண்ணாமலையும் பகிர்ந்துள்ளார். அரசு பள்ளிகளில் சென்று திமுகவினர் மாணவர்களிடம் நீட் குறித்த பிரச்சாரத்தை செய்து உதயநிதியை தெரியுமா உங்களுக்கு? அவர் நீட்டை எடுத்து போராடிக் கொண்டிருக்கிறார், கையெழுத்து இடுங்கள், நீட் என்பது வரக்கூடாது, நீட் தேர்வு வந்தால் மாணவர்களாகிய நீங்கள் படிக்க முடியாது!' என்பது போன்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக பேசி வீடியோ வெளியானது.
அந்த வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை பதிவிட்டு 'திமுகவின் நீட் எதிர்ப்பு பிரச்சாரத்தை நியாயப்படுத்த வேண்டும் என்ற விரக்தி அவர்களை இப்போது அரசு பள்ளிகளில் கொண்டு சேர்த்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தன் மகனின் முட்டாளமான திட்டங்களை முன்னெடுப்பதற்கு பள்ளிகள் அவரது அரசியல் மேடைகளில் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும், திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா அழைக்கப்படாமல் வகுப்பறைக்குள் நுழைந்த நாளைய மருத்துவர்களாக வரக்கூடிய மாணவர்களின் முன்னிலையில் நீட் தற்கொலைக்கு வலியுறுத்துகிறது என விஷமப் பிரச்சாரம் செய்கிறார். ஏன் திமுக அரசு சிறு குழந்தைகளின் மனதில் தற்கொலை எண்ணத்தை விதைக்கிறது திமுக இந்த கேவலமான அரசியலை நிறுத்தவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது பரபரப்பாகி உள்ளது.