Kathir News
Begin typing your search above and press return to search.

ஆளுநர் மாளிகை தாக்குதல் ரவுடி பின்னணியில் சிக்கிய திமுக? எல்லாம் திட்டமா?

ஆளுநர் மாளிகை தாக்குதல் ரவுடி பின்னணியில் சிக்கிய திமுக? எல்லாம் திட்டமா?

Mohan RajBy : Mohan Raj

  |  28 Oct 2023 3:38 AM GMT

ஜாமீன் எல்லாம் போட்டு கருக்கா வினோத்தை சகல மரியாதையுடன் பார்த்துக் கொண்டதா திமுக?

ஆளுநர் மாளிகை பிரதான வாயில் முன்பு சென்னையைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தான் தற்பொழுது தமிழகத்தை உலுக்கியுள்ளது. ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த கருக்கா வினோத் என்பவர் திங்கட்கிழமை வெளிவந்தவுடன் அடுத்த இரண்டு தினங்களில் திட்டமிட்டு ஆளுநர் மாளிகை பிரதான வாயில் முன்பு பெட்ரோல் குண்டை வீசி உள்ளார்.

மேலும் அவரை போலீசார் பிடித்த பொழுது அவரிடம் நாலு பெட்ரோல் பாட்டில் நிரப்பப்பட்டு எரிய தயார் நிலையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் ராஜ் பவனில் இந்த தாக்குதல் குறித்து புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை என ராஜ்பவன் குற்றம் சுமத்தியுள்ளது

அதற்கு பின்னர் இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு புகார் பதிவு செய்யப்பட்டது, இந்த சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகை தரப்பு தெரிவிக்கையில் 'ஏற்கனவே கடந்த ஆண்டு தருமபுரம் ஆதீனத்துக்கு சென்ற ஆளுநருக்கு இதுபோன்ற மிரட்டல் தாக்குதல் நடந்தது தற்பொழுது ஆளுநர் மாளிகை முன்பு இதே போன்ற தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு காரணமானவர்களை திமுக அரசு கடந்த தருமபுர ஆதீனம் சம்பவத்தின் போதும் எதுவும் செய்யவில்லை, இந்த முறையும் வழக்கு போட யோசிக்கிறது' என்கின்ற ரீதியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

ஆனால் ஆளுநர் மாளிகையின் புகார் முற்றிலும் உண்மைக்கு புறமானது என டிஜிபி விளக்கம் அளித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது திமுக வழக்கறிஞர் தான் என்ற உண்மை வெளிவந்துள்ளது. இது குறித்து பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள கணக்கிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது, அந்த எக்ஸ் பதிவில் 'ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை இதற்கு முன்பு ஜாமீனில் எடுத்த திமுகவினர்' என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அந்த பதிவில், 'ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வீசி தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்கின்ற நபரை சிறையில் இருந்து ஜாமினில் வெளியே கொண்டு வந்தது திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிஷோக் ஆகிய இருவர் என தெரிய வருகிறது. பாஜக வழக்கறிஞர் என பரப்பப்படும் முத்தமிழ்செல்வன் என்பவர் தமிழக பாஜக கட்சி பொறுப்பிலிருந்து கடந்த 2021 ஆம் ஆண்டே விலகிவிட்டார்.

அது மட்டுமல்லாது திமுக நிர்வாகிகள் இசக்கி பாண்டி மற்றும் அசோக் ஆகிய இருவரும் முத்தமிழ்செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர் என செய்திகளும் வருகிறது. தமிழக பாஜக அலுவலகத்தை தாக்கிய ஒருவரை திமுகவினர் ஜாமினில் எடுத்துள்ளது இதில் திமுகவினர் சம்மந்தப்பட்டு உள்ளார்களா என சந்தேகத்தை வெளிப்படுத்துகிறது' எனக் கூறி சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இப்படி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்திற்கு பின்னணியில் திமுக இருக்கிறதா என பாஜக சந்தேகம் எழுப்பியது பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில் இந்து முன்னணி மாநில தலைவர் கடைசிவர சுப்ரமணியம் தமிழக காவல்துறையை கடுமையாக சாடி உள்ளார். இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார்... மேலும் இந்த ஆளுநர் மாளிகை தாக்குதல் சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க துவங்கியுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News