தி.மு.க., அ.தி.மு.க., பற்றி தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியது என்ன..?
By : Bharathi Latha
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அவர்கள் சமீபத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தமிழகத்தில் நடக்கும் அரசியல் களங்கள் பற்றி தன்னுடைய பார்வையை எடுத்துரைத்தார். இந்த பற்றிய வீடியோக்கள் தான் தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. பொதுவாக தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் அவர்களின் கணிப்பு கிட்டத்தட்ட தமிழகத்தில் நடந்த வண்ணம் தான் இருக்கிறது.
அந்த வகையில் அவர் தற்பொழுது திமுக மற்றும் அதிமுக பற்றிய கருத்துக்களை அந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் பதிவு செய்து இருக்கிறார். இது பற்றி அவர் மேலும் கூறும் பொழுது குறிப்பாக அவர், "தமிழகத்தில் இரண்டு கட்சிகள் முன்னிலைப் படுத்திக்கொண்டு இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., இரு கட்சிகளிடமும் பணம் இருக்கிறது, ஊழல்வாதிகள். ஊழலுக்கு வித்திடுவதற்கு அதிக பணம் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார். இருவருக்கும் ஒரே சித்தாந்தம்.
எனவே படித்த இளைஞர்கள் அதிகம் வந்து வாக்களிக்கும் போது, தமிழக அரசியலின் எதிர்காலம் ஆளுமை மற்றும் ஆளுமைத் திறன் இருக்கும்” என பிரசாந்த் கிஷோர், அரசியல் வியூகவாதி தன்னுடைய கருத்தை தமிழக அரசியல் களம் குறித்து பதிவு செய்து இருக்கிறார். அது மட்டும் கிடையாது அவர் பாஜகவிற்கு சாதகமான ஒரு செல்வாக்கு தமிழகத்தில் நிலவுவதாகவும் அடுத்த ஒரு ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளில் பாஜகவிற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: Twitter Source