'அப்ரூவர் செந்தில்பாலாஜி...' அறிவாலயத்தை ஆட்டம் காண வைக்கும் அடுத்த ராக்கெட்...
By : Mohan Raj
அப்ரூவர் ஆகிறாரா செந்தில் பாலாஜி...?
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சமயத்தில் வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த நான்கு மாதமாக சிறையில் இருந்து வருகிறார்.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த 3000 பக்க குற்ற பத்திரிக்கையில் மிகவும் வலுவான ஆதாரங்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இது மட்டுமல்லாமல் செந்தில் பாலாஜிக்கு தொடர்ச்சியாக ஜாமீன் நிராகரிக்கப்பட்டு அதுவும் எட்டு முறை நிராகரிக்கப்பட்ட காரணத்தினால் அவர் வெளியில் வருவாரா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் செந்தில் பாலாஜிக்கு தற்பொழுது உடல்நிலை சரியில்லை அவர் மருத்துவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பினர் அவருக்காக ஜாமீன் விண்ணப்பித்து வருகின்றனர், ஆனால் அமலாக்கத்துறை தரப்பிலோ செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக தொடர்கிறார் இது மட்டுமல்லாமல் அவரது சகோதரர் அசோக்குமார் இன்னமும் தலைமறைவாக உள்ளார் இந்த இரு விவகாரங்களும் சிக்கலை ஏற்படுத்தும் செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதனால் அவர் சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு இருப்பதாகவும், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தலைமறைவாக இருப்பதனால் செந்தில் பாலாஜியை வெளியே விட வாய்ப்பு இல்லை எனவும் அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டு செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு முட்டுக்கட்டை போடப்பட்ட வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியை எப்படியாவது மீட்க வேண்டும் என திமுக தரப்பில் சட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அது மட்டுமல்லாமல் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்று மூன்று மாதங்களை கடந்து விட்டதால் அடுத்து தேர்தல் வரவிருக்கும் நிலையில் இது திமுகவிற்கு கண்டிப்பாக பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் செந்தில் பாலாஜி மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார், அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது என கடந்த வாரம் சிறைத்துறை டிஐஜி தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டதும் தற்பொழுது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் தான் செந்தில் பாலாஜி ஏதாவது உளறி விடுவாரோ என திமுக அஞ்சுகிறது என்று விமர்சனம் எழுந்துள்ளது, இது குறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில் 'செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் ஒவ்வொரு நாளும் திமுகவிற்கு சிக்கல்தான்! எங்கே அவர் ஏதாவது உளறி விடுவாரோ' என்கின்ற அர்த்தத்தில் தான் அவரை வெளியே எடுப்பதற்கு இவ்வளவு அவசரம் காட்டுகின்றனர் திமுகவினர். சட்டவிரோத பண பரிமாற்ற விவகாரத்தில் சிறைக்கு சென்றவரை இலாக்கா அல்லாத அமைச்சராக வைத்திருக்கிறது திமுக, அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் இருப்பது தான் இந்த வழக்கு விசாரணைக்கு நல்லது அதன் மூலம் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமல்லாமல் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறும் பொழுது 'செந்தில் பாலாஜியை எப்படியாவது ஜாமினில் எடுக்க வேண்டும் என திமுக முயற்சி செய்து வருவது உண்மை, ஆனால் செந்தில் பாலாஜி நீண்ட நாள் செல்ல செல்ல சிறையில் இருக்கும் காரணத்தினால் செந்தில் பாலாஜி உளறி விடுவாரோ என திமுக அஞ்சுவதும் வாஸ்தவம்' தான் என தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். இப்படி செந்தில் பாலாஜி விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைவதை தொடந்து பல்வேறு சர்ச்சைகளும், பல்வேறு அரசியல் விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது. திமுக அடுத்தகட்டமாக என்ன செய்கிறது என பார்க்கலாம் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்….