முதல்வருக்கு இரவில் வந்த போன் கால்! எ.வ.வேலு ரெய்டில் சிக்கப்போகும் பெரிய மேட்டர்...

முதல்வருக்கு இரவில் வந்த போன் கால்... எ.வ.வேலு ரெய்டு பற்றி பரபர தகவல்..
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக திமுக அமைச்சர் மற்றும் எம்பிக்கள் ரெய்டில் சிக்கி வருகின்றனர், பிரதானமாக செந்தில் பாலாஜி ரெய்டில் சிக்கி அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ரெய்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் 4 மாதமாக இருந்து வருகின்றார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி அவரது மகன் கௌதம சிகாமணி, அதனை தொடர்ந்து எம்,பி ஜெகத்ரட்சகன் என தொடர்ச்சியாக ரெய்டில் சிக்கி வரும் நிலையில் தற்போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை இன்று அதிகாலை முதலில் ரெய்டில் இறக்கியுள்ளது.
சென்னை திருவண்ணாமலை என எ.வ.வேலுக்கு சொந்தமான 40 இடங்களில் ரெய்டு தற்பொழுது நடைபெற்று வருகிறது, அதிகாலை முதலே இந்த ரெய்டு துவங்கியது எனவும், நேற்று இரவே வருமானவரித்துறை அதிகாரிகள் 40 இடங்களுக்கும் சென்றுவிட்டனர் எனவும், சரியாக குறித்த நேரத்தில் ஒரே நேரத்தில் ரெய்டு ஆரம்பிக்கப்பட்டது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மட்டுமல்லாமல் இந்த ரெய்டு 40 இடங்களில் கிடைக்கும் ஆவணங்களை வைத்து இன்னும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்படலாம் என வேறு சில முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே திமுக அமைச்சர்கள் ரெய்டில் சிக்கி வரும் நிலையில் தற்போது எ.வ.வேலு சிக்கி இருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது, அவருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி, அலுவலகங்கள், வீடு மற்றும் அவர் வியாபாரம் நடத்தும் நிறுவனம் ஆகிய இடங்களில் வருமானவரித்துறையினர் தீவிரமாக அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த திமுக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களின் மத்தியில் பேசினாராம், அப்பொழுது பேசும்பொழுது முக்கியமான எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார். அந்த எச்சரிக்கையில் 'லோக்சபா தேர்தல் நெருங்குகிறது கவனமாக இருங்கள், கண்டிப்பாக ரெய்டு விடுவார்கள் ஜாக்கிரதியாக இருங்கள் என சில அமைச்சர்களை குறிப்பிட்டு பேசியிருக்கிறாராம்.
முதல்வர் ஸ்டாலின் அந்த அமைச்சர்களிடம் உங்களை தான் குறி வைப்பார்கள் பார்த்து இருந்து கொள்ளுங்கள் என எச்சரித்தது மட்டுமல்லாமல் இது தொடர்பாக எனக்கு இரவில் அடிக்கடி முக்கிய தகவல்கள் தொலைபேசி மூலம் வருகின்றன எப்போது வேண்டுமானாலும் ரெய்டை எதிர்பாருங்கள் என கூறியது வேறு குறிப்பிடத்தக்கது. இப்படி முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்கனவே வந்த தொலைபேசி அழைப்பு தகவல்களின்படி தற்பொழுது ரெய்டு நடந்துவருகிறது என வேறு சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த ரெய்டு கிடைக்கும் ஆவணங்களை வைத்து எ.வ.வேலுவிற்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பம் ஆகலாம் எனவும் வேறு செய்திகள் வருகின்றன, அவருக்கு சொந்தமான இடங்கள் மட்டுமல்ல வேறு ஒரு சில இடங்களிலும் தற்பொழுது ரெய்டு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டிச் சாலையில் உள்ள ரவி என்பவரின் ரெசிடென்சி ஹோட்டலில் வருமானவரித்துறையினர் இறங்கியுள்ளார்கள்.
ரியல் எஸ்டேட் உரிமையாளர் அப்பாசாமியின் மகன் தான் ரவி என்பதும் குறிப்பிடத்தக்கது, இது மட்டுமல்லாமல் திமுகவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ள மீனா ஜெயக்குமார் வீட்டில் ரெய்டு நடக்கிறது. திமுகவில் இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகி இந்த மீனா ஜெயக்குமார், அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார் என்பது கூடுதல் தகவல்.
தற்பொழுது திமுகவில் இருக்கக்கூடிய முக்கிய அமைச்சர்களில் அதுவும் சீனியர் அமைச்சர்களில் ஒருவர்தான் இந்த எ.வ.வேலு ஆரம்ப காலகட்டத்தில் அதிமுகவில் இருந்த எ.வ.வேலு பின்னர் அங்கு ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக வெளியேறி பாக்கியராஜ் கட்சி அதன் பிறகு ரஜினி ஆதரவு நிலைப்பாடு என எடுத்து இறுதியாக திமுகவில் ஐக்கியமாணவர் தான் இந்த எ.வ.வேலு. 2006 ஆம் ஆண்டு முதன்முறையாக திமுக அமைச்சரவையில் இடம்பிடித்த எ.வ.வேலு அன்று முதல் இன்று வரை திமுக அமைச்சரவையில் முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.