பாஜகவில் போய் பொழைச்சுக்கோ, திமுக எல்லாம் வேஸ்ட் மகனே! - சூர்யா சிவாவை விரட்டிய திருச்சி சிவா! வார்த்தைகள்தான் ட்விஸ்ட்டே!
By : Mohan Raj
'இனி மோடி தான்.. திமுக பக்கம் வந்துடவே வந்திடாத' இப்படி சொன்னது யார் தெரியுமா?
திருச்சியில் திமுகவில் மிகவும் சீனியர் தலைவராக வலம் வருபவர் திருச்சி சிவா, எம்.பியான திருச்சி சிவா இவர் டெல்லியில் திமுகவை முன்னெடுத்துச் செல்வதில் வல்லவர் என திமுகவினரால் புகழப்படுபவர். இவரது மகன் சூர்யா சிவா திடீரென கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார், பாஜகவில் இணைந்த இவருக்கு ஓபிசி மாநில செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.
பின்னர் சில காரணங்களுக்காக அவரிடம் இருந்து அந்த பதவி பறிக்கப்பட்டு தற்காலிகமாக பாஜகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார், விலக்கி வைக்கப்பட்ட போதும் எனக்கு அண்ணாமலை தான் தலைவர் அவரைத்தான் நான் தலைவராக ஏற்றுக்கொள்வேன் எனக்கு வேறு கட்சிகளில் இணைய விருப்பமில்லை எனக்கூறி வேறு கட்சிகளில் இணையாமல் இருந்தார்.
இந்த நிலையில் அவரைக் கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்து ஆறு மாதங்களுக்கு பிறகு சில சமரசங்களுக்கு பிறகு திருச்சி சூர்யா சிவாவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீண்டும் பாஜகவில் இணைத்துக் கொண்டதுடன் அவர் பதவி வகித்த அதே ஓபிசி மாநில செயலாளர் பதவியும் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த ஆறு மாத கால இடைவெளி மற்றும் அரசியல் பயணம் குறித்து youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சூர்யா சிவா கூறியது தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகிறது.
சூர்யா சிவாவிடம் நெறியாளர் கேட்ட ஒரு கேள்விக்கு சூர்யா சிவா பதில் அளிக்கும் பொழுது, வீட்டில் நானும் எனது அப்பாவும் பேசிக் கொண்டிருந்தோம், அப்பொழுது திமுக எம்.பி'ஆன எனது தந்தை திருச்சி சிவா ஏன் பாஜகவில் இருந்து வெளியே வந்தாய்? இனி மோடி தான், ஏதாவது செய்து பாஜகவில் மீண்டும் போய் சேர்ந்து கொள் தப்பி தவறி கூட திமுக பக்கம் எல்லாம் வந்து விடாதே! இங்கே இவர்களுக்கு மரியாதையும் தெரியாது, நீ வளரவும் முடியாது!
பாஜக தேசிய கட்சி என்றைக்காவது ஒரு நாள் உனக்கான அங்கீகாரம் கிடைத்தே தீரும், அடுத்து மோடி தான் நிச்சயம் வருவார். ஆகையினால் பாஜகவில் சேருகின்ற வழியை பார் எனக்கூறி அட்வைஸ் செய்துள்ளார்.
இதனை சூர்யாவே ஒப்பு கொண்டுள்ளார், இந்த வீடியோ தான் தற்பொழுது இணையங்களில் வைரல் ஆகிறது. திமுகவில் இருக்கக்கூடிய ஒரு சீனியர் எம்பி அதுவும் பல ஆண்டு காலமாக திமுகவின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் அவரே தன் மகனை திமுகவிற்கு திரும்பி வந்து விடாதே! இங்கே உன்னை மதிக்க மாட்டார்கள்? அடுத்து மோடி தான் அடுத்து பாஜக தான் எதிர்காலம், இங்கே எல்லாம் ஒன்றும் எதிர்காலம் இல்லை! எனக் கூறியது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக திமுகவில் இருக்கக்கூடிய புதிய இளைஞர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது, என்னடா ஒரு திமுகவில் இருக்கக்கூடிய சீனியர் எம்.பி இப்படி தன் மகனையே அடுத்த மோடி தான்! பாஜகவில் போய் சேர்ந்துகொள்! என அனுப்பி வைக்கிறாரே அப்படி என்றால் நம் எதிர்காலம் எல்லாம் என்று கேள்வியும் இளைஞர் மத்தியில் எழுந்துள்ளதாக பல விமர்சனங்கள் உலா வருகிறது.
இது மட்டுமல்லாமல் ஏற்கனவே கட்சியில் சீனியர்கள் பலர் மதிக்கப்படவில்லை, தி.மு.க கட்சியில் உக்கட்சி பூசல் அதிகமாக இருக்கிறது, கட்சியினர் அடித்துக் கொள்கிறார்கள், அதையெல்லாம் கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கண்டுகொள்ளவே இல்லை என பல வதந்திகளும் பேசப்பட்டு வந்த நிலையில் திருச்சி சிவா சொன்னதெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது இவை எல்லாம் உண்மை என்றுதான் தோன்றுகிறதோ எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.