தொடர்ந்து ஐடி ரெய்டில் சிக்கும் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள்! பதட்டத்தில் எ.வ. வேலு!
By : Sushmitha
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவிற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது தற்போது நாலாவது நாளை எட்டியுள்ளது.
சென்னை, கரூர், கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட அமைச்சர் தொடர்புடைய அனைத்து பகுதிகளிலும் ராணுவ வீரர்களின் பாதுகாப்புடன் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனையானது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வரி ஏய்ப்பு செய்வதற்காக வந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அதிகாரிகளின் இந்த சோதனையில் காசா கிராண்ட் அலுவலகம், அருணை கல்வி குழுமம், கோல்டன் மார்பில் உரிமையாளர் வீடு அடங்கியதும் குறிப்பிடத்தக்கது. இப்படி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த நான்கு நாள் தொடர் ரயிலில் அருணை கல்வி குழுமத்தில் இடமிருந்து இதுவரை 18 கோடி ரூபாய் அதிகாரிகள் கைப்பற்றியதாக செய்திகள் வெளியாய் இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது அருணை குழுமத்திடமிருந்து மேலும் 6 கோடி ரூபாயை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
Source : News Tamil 24×7