ராமர் மண்ணான ராமேஸ்வரத்தில் மோடி... அப்போ கன்பார்ம்தானா?
By : Mohan Raj
ராமர் மண்ணில் பிரதமர், களைகட்ட போகும் தென் மாவட்டங்கள்
தமிழகத்தில் இருக்கும் ஆன்மிக தளத்தில் மிகவும் ரசித்து பெற்ற தலமாகவும் இந்தியா முழுவதிலும் இருக்கும் மக்கள் வந்து வழிபட்டு புகழ் பெற்று திகழ்ந்த ராமேஸ்வரத்திற்கு ஆண்டுதோறும் ஒரு கோடிக்கு மேல் பக்தர்கள் வந்து செல்வார்கள். திருத்தலத்தை தாண்டி ராமநாதபுரத்தையும் ராமேஸ்வரத்தையும் இணைக்கின்ற பாலத்தை காண்பதற்காக ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் பாம்பன் பாலத்தில் நிறுத்தி கப்பல் ரயில் செல்வதை கண்டு செல்வார்கள்.
ஜெர்மன் பொறியாளரால்ஷெசர்ஸ் என்பவரால் தூக்குப்பாலம் பாம்பன் பாலம் அமைக்கப்பட்டது. அதைப் முன்பாக 1914 இல் பழைய பாம்பனில் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த தூக்கு பாலம் கப்பல் வரும் பொது 2 பகுதிகளாக மேலே விரிந்து வழிவிடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த பாலம் அமைக்கப்பட்டு எந்த ஒரு பிரச்சனையும் இன்றி 100 ஆண்டுகளுக்கு மேலாக நினைத்து நின்றிருந்தது ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து இந்த பாலம் ஆனது அடிக்கடி பழுது ஏற்பட்டு மாதக்கணக்கில் போக்குவரத்து நெரிசலும் போக்குவரத்து தடையும் ஏற்பட்டது. இதனால் ராமேஸ்வரம் ரயில்கள் அனைத்து மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டது. இந்த கொடுமையில் இருந்து மக்களை மீட்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2019 ஆம் ஆண்டில் பாமனின் புதிய ரயில் பாலம் கட்டுவதற்காக ரூபாய் 5035 கோடி மதிப்பிலான கட்டுமான பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இதன் கட்டுமான பணிகள் 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வந்தது பிறகு கொரோனா காலத்தால் பாலம் கட்டுவதற்கான பணிகள் தாமதமானது. கொரோனா காலத்திற்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களாக இதன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தற்போது ஏறத்தாழ பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைய உள்ளது. ஆசியாவிலேயே கடல் பகுதியில் அமைந்துள்ள முதல் பாலமாகவும் கிட்டத்தட்ட மண்டபத்திலிருந்து மாமன் வரை 2.07 கிலோ மீட்டர் நிலம் கொண்டது இந்த புதிய பாம்பன் பாலம். மேலும் செங்குத்து தூக்குபாலும் 72.1 மீட்டர் நீளமும் 3 மீட்டர் உயரத்திலும் 500 டன் எடையும் அமைக்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 95 சதவீதம் பாலத்தின் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் நெஞ்சிருக்கும் வேலைகளில் பெயிண்ட் அடிக்கும் பணியாவது காரைக்குடி மத்தியில் வேதியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் பரிந்துரையின் பெயரிலே புதிய தோக்கு பாலத்தின் 50 ஆண்டுகளுக்கு துருப்பிடிக்காத வகையிலான பெயிண்ட் அடிக்கப்பட உள்ளது. கடலுக்குள் 333 பிரத்யேக தூண்கள் அமைக்கப்பட்டு பாலத்தின் இரண்டு வலி தண்டவாளங்கள் மின்சார ரயில் இன்ஜின்கள் செல்லும் வகையில் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது முதற்கட்டமாக ஒரு வழித்தட தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. கிட்டத்தட்ட 92 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது,
இதனால் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கும் திறப்பு விழாவிற்கான நடவடிக்கைகள் மும்முறமாக நடைபெற்றுள்ளது இந்த திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முன் நின்று புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பாகவே இராமேஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட உள்ளார் என்ற செய்தியும் வெளியானது அதற்கான முன்னோட்டமாகவே இந்த திறப்பு விழா இருக்கலாம் என்றும் பாஜகவினர் கூறுகின்றனர். இந்த திறப்பு விழாவின் போது கிடைக்கும் வரவேற்பை வைத்து டெல்லி மேலிடம் இதனை முடிவு செய்யலாம் எனவும் தகவல்கள் கசிகின்றன. ராமேஸ்வரத்திற்கு பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு கோலாகல வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.