Kathir News
Begin typing your search above and press return to search.

மொத்தமாக சிக்கிய பெரிய தலைகள்! சுற்றிவளைக்கப்பட்ட அறிவாலய கஜானா....

மொத்தமாக சிக்கிய பெரிய தலைகள்! சுற்றிவளைக்கப்பட்ட அறிவாலய கஜானா....
X

Mohan RajBy : Mohan Raj

  |  9 Nov 2023 3:24 AM GMT

நடுங்க ஆரம்பித்த அறிவாலய தலைமை.... மேட்டர் இதுதானா?

கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது, திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலம் முதல் ஒன்றரை வருட காலம் வரை திமுக அமைச்சர்கள் மீதான எந்த ஒரு சட்ட நடவடிக்கை இல்லாமல் இருந்தது.

அப்படி இருக்கும் சூழலில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அதுவும் குறிப்பாக கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட முதல் செந்தில் பாலாஜி ரெய்டு தான் தற்பொழுது வரை திமுகவை தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வைத்து வருகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார், அதனை தொடந்து அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்பட்டார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளதை தொடர்ந்து அவருக்கு எதிராக தொடர்ந்து தரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு தற்பொழுது சிறையில் உள்ள இவர் ஜாமீன் மனு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

அதனை அடுத்து பொன்முடி மீதான ரெய்டு சற்று திமுகவை நிமிர்ந்து உட்கார வைத்தது. இரண்டு முக்கிய வழக்குகளில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டாலும் கடந்த 96-2001 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும் பொழுது அவர் முறைகேடாக நிலம் வாங்கியதாக கூறப்பட்டது.

மேலும் 96 முதல் 2002 ஆம் ஆண்டு வரை கால காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 26 ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறையினர் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் பொன்முடியை அமலாக்கத்துறை குறி வைத்து ரெய்டில் இறங்கி பொன்மொழிக்கு சொந்தமான இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தியது.

இது மட்டுமல்லாமல் அடிக்கடி அவரை விசாரணைக்கு அழைத்தும் வருகிறது அமலாக்கத்துறை, அடுத்தபடியாக எம்.பி.ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்கள், வீடுகள், கல்லூரிகள், ஹோட்டல்கள் என ஒரு இடம் விடாமல் வருமான வரித்துறை இறங்கியதில் ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது என கூறப்பட்டது.

மேலும் அவர் சொத்துக்கள் மற்றும் பணபரிமாற்றங்கள் அனைத்தும் தற்பொழுது கண்காணிப்பில் உள்ளதால் ஜெகத்ரட்சகன் அவரது பணத்தை எங்கேயும் அனுப்ப முடியாமல் பெற முடியாமலும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபமாக எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் கடந்த ஐந்து நாட்களாக வருமானவரித்துறையால் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ரெய்டில் எ.வ.வேலு மட்டுமில்லாமல் அவருடன் நெருக்கம் காட்டிய அனைவரும் சிக்கியுள்ளனர், ஐந்து நாட்களாக நடந்து வரும் ரெய்டின் முடிவில் எ.வ.வேலுவிற்கு வருமானவரி துறையினர் பரிமாற்றம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக கண்காணிப்பு வளையத்திற்குள் வைப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

இப்படி திமுகவின் செந்தில் பாலாஜி முதல் எ.வ.வேலு வரை மொத்த கஜானாவையும் வருமான வரி துறையினர் அமலாக்கத் துறையினர் மொத்தமாக ரவுண்டு கட்டி உள்ளதால் வரும் தேர்தல் செலவிற்கு திமுகவிற்கு கண்டிப்பாக நெருக்கடி ஏற்படும் எனக் கூறுகின்றன சில அரசியல் பார்வையாளர்கள்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறும் பொழுது கடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் திமுகவினர் பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்றனர், அது போல இந்த தேர்தலிலும் நடந்து கொள்ள முடியாது காரணம் திமுகவின் பெரிய தலைகள் எல்லாம் கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கிறார்கள். இது மட்டுமல்ல ரெய்டு பட்டியல் இன்னும் அதிகமாகலாம் எனவும் தேர்தல் முடிவடைவதற்குள் திமுகவின் கஜானாவே நெருக்கடிக்கு உள்ளாகும் எனவும், இதனால் தேர்தல் செலவுக்கு கூட திமுகவால் பணத்தை வெளியில் எடுக்க எனவும் கூறுகின்றனர். இதுதான் திமுக விற்கும் தற்போதைய கவலையாக இருக்கிறது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News