Kathir News
Begin typing your search above and press return to search.

'ஓவர் ஆட்டம்' - குட்டு வெளிப்பட்டதால் பறிக்கப்படும் மஹுவா மொய்த்ரா எம்.பி பதவி...

ஓவர் ஆட்டம் - குட்டு வெளிப்பட்டதால் பறிக்கப்படும் மஹுவா மொய்த்ரா எம்.பி பதவி...
X

Mohan RajBy : Mohan Raj

  |  11 Nov 2023 3:25 AM GMT

பறிபோகிறது மஹுவா மொய்த்ரா எம்பி பதவி...

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் மஹுவா மொய்த்ரா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவர். மஹுவா மொய்த்ரா மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணா நகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனார்.

மேற்கு வங்கத்திலிருந்து எம்.பி ஆகி நாடாளுமன்றத்திற்கு வந்த இவர் பாஜகவிற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் அதிக முறை தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ஆனால் இவர் வெளியில் தொழில் அதிபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டுதான் பாஜகவிற்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும், தொழிலதிபர் அம்பானிக்கு எதிராகவும் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் பரப்பி வந்தார் என புகாரை பாஜக m.p நிஷிகாந்த் துபே வைத்தார்.

இது குறித்து கூறும் பொழுது எம்.பி நிஷிகாந்த் துபே கூறும்போது, 'தொழிலதிபர் ஹிரா நந்தனிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றார், அது மட்டுமல்லாமல் பாஜகவை பற்றி அவதூறு பரப்பவும், பிரதமர் மோடியை பற்றி அவதூறு பரப்பவும், தொழிலதிபர் அதானியையும், பாஜகவையும் சம்மந்தப்படுத்தி நாடாளுமன்றத்தில் கேள்விகளை முன் வைக்கவும் இவருக்கு வெளியில் இருந்து அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாக நிஷிகாந்த் துபே பகிர் குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

இது குறித்து தொழிலதிபர் ஹிரா நந்தனிடம் மஹுவா மொய்த்ராவிற்கு நான் பணம் கொடுத்துள்ளேன், அது மட்டுமல்லாமல் மஹுவா மொய்த்ராவின் நாடாளுமன்ற உறுப்பினர் இணையதள முகவரியின் பாஸ்வேர்ட் என்னிடம் உள்ளது, அவர் நாடாளுமன்றத்தில் இருக்கும்பொழுது அவருக்காக கேள்விகளை அனுப்பவேன் எனக்கூறி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஹிரா நந்தன் கூறும் பொழுது மஹுவா மொய்த்ரா வெளிநாடுகள் செல்வதற்கும் மற்றும் சில வேலைகளுக்கும் நான் அதிக பணம் கொடுத்துள்ளேன் எனக் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறும் பொழுது, மஹுவா மொய்த்ரா எம்.பி என்பதால் என் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதால் அதனை செய்தேன்' என்றார். இது குறித்து மஹுவா மொய்த்ரா மறுப்பு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மஹுவா மொய்த்ரா மீது விசாரணை நடத்த நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு மஹுவா மொய்த்ராவை விசாரணைக்கு நேரில் அழைத்திருந்தது, ஆனால் அந்த விசாரணைக்கு வர முதலில் மஹுவா மொய்த்ரா மறுத்துவிட்டார். பின்பு மஹுவா மொய்த்ரா விசாரணைக்கு வரவேண்டும் என மீண்டும் அழைக்கப்பட்டதால் கடந்த வாரம் விசாரணைக்கு ஆஜரானார்.

அப்பொழுது மஹுவா மொய்த்ராவிடம் பல கேள்விகளை நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு முன்வைத்து விசாரணைகள் நடத்தியது, இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே பாதியில் வெளியேறினார் மஹுவா மொய்த்ரா.

தற்பொழுது இந்த குழு 500 பக்க அறிக்கையை தயார் செய்து கொடுத்திருக்கிறதாம் இதில் மஹுவா மொய்த்ரா லோக்சபா எம்பி பதவியை பறிக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் மஹுவா மொய்த்ரா ஹிரானந்தன் இடையேயான பண பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தவும் மத்திய அரசுக்கு இந்த நாடாளுமன்ற நெறிமுறைகள் பரிந்துரைத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் சிபிஐ, அமலாக்கப் பிரிவினர் அடுத்ததாக மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தக்கூடும் ஏற்கனவே சிபிஐ விசாரணை குறித்து மிகக் காட்டமாக மஹுவா மொய்த்ரா விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பிரதமர் மோடியை விமர்சிப்பதற்கும், பாஜகவை பற்றி நாடாளுமன்றத்தில் அவதூறு பரப்புவதற்கும், வெளியில் பணம் வாங்கிக்கொண்டு விதிமுறைகளுக்கு புறம்பாக இயங்குவது குறித்தும் தகவல்கள் வெளிவந்து தற்பொழுது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவரைத்தான் இடதுசாரிகள் மஹுவா மொய்த்ராவை பாருங்கள் நாடாளுமன்றத்தில் எப்படியெல்லாம் கேள்வி எழுப்புகிறார், ஒரு பெண் எழுப்பும் கேள்விக்கு பாஜக பதில் கூற முடியாமல் தவிக்கிறது என்றெல்லாம் கொண்டாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News