Kathir News
Begin typing your search above and press return to search.

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே...? காமெடிநாயகனாக மாறிய உலகநாயகன்....

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே...? காமெடிநாயகனாக மாறிய உலகநாயகன்....

Mohan RajBy : Mohan Raj

  |  14 Nov 2023 2:49 AM GMT

நெட்டிசன்களிடம் வறுபடும் கமல்.... இதெல்லாம் இந்த வயசுல தேவையா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 சீசனை முடித்துவிட்டு தற்பொழுது ஏதாவது சீசன் துவங்கி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பேசும் கருத்துக்கள், செய்யும் செயல்கள் இந்த ஆறு சீசனிலும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் 6 சீசன்களையும் தாண்டி தற்பொழுது ஏழாவது சீசனில் போட்டி ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே சர்ச்சை அதிகமாக உள்ளது. முதலில் பவா செல்லதுரை நடவடிக்கைகள், அடுத்த பிறகு பிரதீப் ரெட் கார்டு கொடுத்து காரணம் கேட்காமலே அனுப்பப்பட்டது. இப்படி பல சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில் நிக்சன் பெண்களிடம் நடந்து கொள்ளும் முறையும் பல விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் விதம் தற்பொழுது இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது, கமலஹாசன் குறித்த கமெண்ட்கள் இந்த வயதில் இதெல்லாம் தேவையா ஆண்டவரே? என இணையங்களில் வைரலாக உலா வருகிறது.

குறிப்பாக தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் பிக் பாஸை தொகுத்து வழங்கிய கமலஹாசன் உடுத்தி வந்த உரைதான் தற்பொழுது இணையங்களில் அதிகமாக பேசப்படுகிறது. கிட்டத்தட்ட சுடிதார் போன்று, சுடிதார் போன்றல்ல அது சுடிதார் தான்! பெண்கள் போட்டால் கண்டிப்பாக அது சுடிதார் மாதிரி தான் இருக்கும். அதுபோன்று உடை அணிந்து வந்து பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கின கமலஹாசன் செயலுக்கு இணையத்தில் தற்பொழுது வைரல் கமெண்ட்கள் பறந்து வருகின்றன.

அவசரத்தில் ஆண்டவர் ஸ்ருதி அக்கா டிரஸ் எடுத்து போட்டு வந்துட்டாரு! எனவும் எலிசபெத்து டெய்லர் மகளா! எனவும் பல கமெண்ட்கள் பறக்கின்றன. 70 வயதாகும் ஒரு நடிகர் அதுவும் மக்கள் நீதி மையம் என்ற ஒரு கட்சியை துவக்கி மக்கள் பிரச்சனையை பற்றி பேச ஆசைப்படும் நடிகர் இப்படி உடை விஷயத்தில் அதுவும் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பார்க்கும் படியான ஒரு சில செயல்களை கிண்டல் ஆகும் படி செய்து வருவது நன்றாகவா இருக்கிறது என பலரும் விமர்சிக்கின்றனர்.

ஆரம்ப காலகட்டத்தில் கமல் என்றால் ஒரு மரியாதை இருந்தது, இப்பொது அது இல்லாமலே போய்விட்டது எனவும் விமர்சனங்கள் பறக்கின்றன. திரைப்பட கமலுக்கும், நிஜ வாழ்க்கை கமலுக்கும் வித்தியாசம் உள்ளது! நிஜ வாழ்க்கையில் கமல் இப்படி செய்யும் செயல்கள் கோமாளித்தனமாக பார்க்கப்படுவது திரையுலக கதாநாயகன் கமல் இவரா என கேள்வி கேட்கும்படி அமைந்து விட்டதாக வேறு பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

ஆனால் கமல்ஹாசன் தரப்போ அதை எல்லாம் கலந்து கொள்ளாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்து என்ன செய்யலாம்? என்ன வித்தியாசத்தை செய்யலாம்! என அதிலேயே குறியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சி இணையத்தில் மக்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்கள் இளைஞர்கள், மத்தியில் ஒருவிதமான குரூர எண்ணத்தை விதைக்கிறது. அது நல்ல எண்ணத்தை பிரதிபலிக்கவில்லை, பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் அனைவரும் வேறு ஒரு மாதிரியான மன அழுத்தங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதும், ஆனாலும் தொடர்ச்சியாக ஆறு சீசன்களை முடித்துவிட்டு தற்பொழுது ஏழாவது சீசனை இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவதும் பல விமர்சனங்களை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்று எனக்கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கிய கமல் இப்படி சுடிதார் போட்டு சுற்றுவது ஏன் என பலர் சமூக வலைத்தளங்களில் கமல் புகைப்படத்தை பகிர்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News