Kathir News
Begin typing your search above and press return to search.

சிரித்துக்கொண்டே கை கொடுக்கவந்த சேகர்பாபு... சம்பவத்தை செஞ்சுவிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி.... வேற லெவல்!

சிரித்துக்கொண்டே கை கொடுக்கவந்த சேகர்பாபு... சம்பவத்தை செஞ்சுவிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி.... வேற லெவல்!

Mohan RajBy : Mohan Raj

  |  15 Nov 2023 2:17 AM GMT

அடுத்த சம்பவம் செய்த ஆளுநர் ரவி...! சேகர் பாபுவிற்கு ஏற்பட்ட பரிதாப கதி....!

ஆளுநர் ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே பல கருத்துகள் ரீதியான மோதல்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் சனாதன தர்மத்தை பற்றி பேசுவதும், அதற்கு திமுக பதிலடி கொடுப்பதும், ஆளுநர் நமது கலாச்சாரங்கள் மற்றும் பண்பாடுகளை ஆங்கிலேயர்கள் அழித்துவிட்டனர் கூறுவதும் அதற்கு திமுக பதில் கொடுப்பதும், நமது கல்விமுறையை ஆங்கிலேயர்கள் மாற்றிவிட்டனர் என ஆளுநர் என்.ரவி கூறுவதும் அதற்கு திமுக பதில் கருத்துகளை வைப்பதும் தொடர்கதை ஆகி வருகிறது.

இந்த நிலையில் ஆளுநர் மற்றும் திமுக என்றாலே கருத்தியல் ரீதியான முரண்பாடுகள் மற்றும் வாக்குவாதங்கள் இருக்கும் என தொடர்ச்சியாக அரசியல் உலகில் பார்க்கப்பட்டு பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் சில இடங்களில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அரசு தரப்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டியில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதன், தாமோ அன்பரசன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி ஆகியோ கலந்து கொண்டனர்.

கொட்டும் மழையிலும் நேரு சிலைக்கு மரியாதை செலுத்த வந்த ஆளுநர் ரவியை அமைச்சர்கள் வெள்ளக்கோயில் சாமிநாதன், தாமோ அன்பரசன், சேகர் பாபு ஆகியோர் புத்தகங்களை பரிசளித்து வணக்கம் சொல்லி வரவேற்றனர்.

அப்பொழுது அமைச்சர் சேகர்பாபு ஆளுநரை வரவேற்று சிரித்துக் கொண்டே ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் கைகொடுக்க சென்றார், அமைச்சர் தன்னிடம் கை கொடுக்க வருகிறார் என்பதை கண்டும் காணாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் சேகர் பாபுவிற்கு பின்னால் நின்று கொண்டிருந்த துணை மேயர் மகேசை பார்த்து வணக்கம் வைத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் நேரு படத்திற்கு மலர்கள் தொகுதி செலுத்திவிட்டு உடனடியாக புறப்பட்டு விட்டார், இதனால் சேகர்பாபு முகம் வெளிறிப்போனது என அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். அங்கிருந்த செய்தி சேகரிப்பாளர்களும் இதனையே கூறுகின்றனர்.

சேகர்பாபு இதனால் சிறிது நேரம் அப்செட்டாக நின்று கொண்டிருந்தார் எனவும் தெரிவிக்கின்றனர், மழையின் காரணமாக ஆளுநர் உடனடியாக நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார் என கூறப்பட்டாலும், ஆளுநருக்கு தெரியும் அவர் அரசு அதிகாரியாக இருந்தவர் ஒரு அரசின் நிகழ்ச்சியில் சென்று கலந்து கொண்டால் எது மாதிரியான ஆட்கள் வருவார்கள் யார் யாருக்கெல்லாம் மரியாதை செய்ய வேண்டும் என அவருக்கு முன் அனுபவம் ஜாஸ்தி அவர் செய்தது வேண்டுமென்றேதான் ஒரு சிலர் கூறுகின்றனர்.

ஆனால் ஒரு சிலர் இது எதேச்சையாக நடந்து இருக்கலாம் இதை பெரிது படுத்த வேண்டாம் எனவும் கூறுவதும் குறிப்பிடத்தக்கது, மேலும் கடந்த மாதம்தான் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது, அப்போதே ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும் அறிவிப்பும் வெளியானது. மேலும் ஆளுநர் சனாதன தர்மத்தை பற்றி எங்கு சென்றாலும் பேசி வரும் நிலையில் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு அறநிலைத்துறை அமைச்சராக இருந்து கொண்டு சேகர் பாபு பேசியதும் ஆளுநருக்கு கண்டிப்பாக தோன்றி இருக்கும் எனவும் வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News