தரிசன கட்டணத்தை உயர்த்தி ஏழை மக்களை இந்து சமய அறநிலையத் துறை தாக்குகிறது! வானதி சீனிவாசன் கண்டனம்!
By : Sushmitha
சாதாரண நாட்களிலும் அதிக கூட்டங்களை பெறும் கோவில்களாக முருகனின் ஆறுபடை வீடுகள் உள்ளது. இந்த நிலையில் தற்பொழுது கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்ட வருகின்ற காரணத்தினால் திருச்செந்தூர் கோவிலில் வழக்கத்திற்கு அதிகமாக பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. பொதுவாக திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் பொது தரிசனம் என்று இரு வழிகள் மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதில் சிறப்பு தரிசனத்தில் ரூபாய் ஆயிரம் பக்தர்களிடம் வசூலிக்கப்படும். இது மட்டுமல்லாமல் விஸ்வரூப தரிசன கட்டணமாக ரூபாய் ஆயிரம் அதிகாலையில் வசூலிக்கப்படும், அபிஷேக கட்டணம் என ரூபாய் 500, விசேஷ நாட்களில் ரூபாய் 2000 வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்பொழுது கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்களிடம் வசூலிக்கப்படும் தரிசன கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது விஸ்வரூப தரிசன கட்டணமாக ரூபாய் 2000, ரூபாய் 3000 யாகசாலை உள்ளே அமர்ந்து பார்க்கவும், ரூபாய் 3000 அபிஷேக கட்டணமாகவும், விரைவு தரிசனம் என்ற பெயரில் புதிய பாதைகளை அமைத்து ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் இந்து சமய அறநிலையத்துறை திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலின் தரிசன கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தி உள்ளது. இப்படி பக்தர்களிடம் தமிழக அரசு கொள்ளை அடிப்பது பெரும் அநீதி! பக்தர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என தனது கண்டனத்தை தெரிவித்தார்.
Source : The Hindu Tamilthisai