சீனியர்ன்னா ஓரமா போங்க! திமுகவில் துரைமுருகனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை... பரபர பின்னணி...
By : Mohan Raj
மூத்த தலைவருக்கே இப்படி ஒரு விதியா... திமுக பொதுச்செயலாளருக்கு ஏற்பட்ட சோகம்!
திமுகவில் துரைமுருகன் தனது டீன் ஏஜ் வயதிலிருந்தே இயங்கி வருகிறார். கல்லூரி மாணவர் பருவத்தில் இருந்து திமுக மீது இவருக்கு ஈடுபாடு அதிகம், குறிப்பாக இவரை எம்ஜிஆர் அதிமுகவிற்கு வந்துவிடு என அழைத்த பொழுதும் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் எம்ஜிஆர், ஆனால் எனது தலைவர் கருணாநிதி தான் எனக்கூறி அதிமுகவிற்கு செல்லாமல் திமுகவிலேயே இருந்தவர் துரைமுருகன்.
ஒரு காலகட்டத்தில் இடி, மின்னல், மழை என்கின்ற திமுகவின் முழு வீச்சில் பேச்சு நிகழ்ச்சிகள் நடத்தியதில் துரைமுருகனுக்கு மிகப் முக்கிய பங்கு உண்டு, அவருடன் அரசியல் செய்த, அவருடன் திமுகவில் பயணித்த பலர் இன்று உயிருடன் இல்லை. இவ்வளவிற்கும் கருணாநிதிக்கு மனசு சோர்வாக இருந்தால் கூட துரைமுருகனை அழைத்து வரவழைத்து பேச சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பாராம் அந்த அளவிற்கு துரைமுருகன் அரசியலில் மூன்று தலைமுறைகளை பார்த்தவர். தற்பொழுது திமுகவின் பொது செயலாளர் ஆக இருந்து வருகிறார், தமிழக அமைச்சரவையில் நீர்வளத்துறையை தன் கைவசம் வைத்துள்ளார் துரைமுருகன்.
இப்படி பழம்பெரும் தலைவராக வலம் வரும் துரைமுருகன் தற்பொழுது திமுகவில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார் எனவும் அதாவது சொல்லப்போனால் முதல்வர் ஸ்டாலினே தற்பொழுது துரைமுருகனிடம் பேசுவதில்லை பேசி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது எனவும் இந்த தகவலை அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ளார்.
youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சவுக்கு சங்கர் கூறியதாவது, 'துரைமுருகன் கிட்டத்தட்ட ஓய்வு பெறும் வயதுக்கு வந்து விட்டார். நீர்வளத் துறையை அவர் கையில் வைத்திருக்கிறார், தற்பொழுது நடந்து வரும் மணல் ரெய்டில் பல விஷயங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை எல்லாவற்றையும் முதல்வர் ஸ்டாலின் பேசி அடுத்து என்ன செய்ய வேண்டும் என முடிவெடுக்க வேண்டும், இவர் யாரிடமும் பேச மாட்டேன் என்கிறார்.
இவ்வளவு ஏன் திமுகவில் இருக்கக்கூடிய முக்கிய தலைவர்கள் யாரிடமும் கட்சியை பற்றியும், ஆட்சியைப் பற்றியும் முதல்வர் ஆலோசனை செய்வதே கிடையாது. அவர் பாட்டுக்கு இஷ்டத்துக்கு இருக்கிறார், யாரிடமும் பேச வேண்டாம் துரைமுருகனிடம் கூட அவர் பேசுவதில்லை. எவ்வளவு பெரிய சீனியர் லீடர் துரைமுருகனிடம் முதல்வர் ஸ்டாலின் பேசிய இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது' என கூறியது தற்பொழுது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவின் வரலாற்றில் மிக முக்கிய பங்காற்றியவர் இன்று அந்த இயக்கம் வளர்ந்து இருப்பதற்கு முக்கிய காரணகர்த்தாவாக ஒருவராக இருக்கும் துரைமுருகனுக்கே இந்த நிலைமை என்றால் நமக்கெல்லாம் என்ன நிலைமை? எனவும் திமுகவினர் மத்தியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படி பொதுச் செயலாளருக்கே இந்த நிலை என்றால் மற்றவர்கள் நிலை என்ன எனவும் கேள்வி எழுந்துள்ளது, மேலும் சவுக்கு சங்கர் மற்றொரு விஷயத்தை கூறியுள்ளார், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது, அந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை யார் அறிவிக்க வேண்டும்? துரைமுருகன் தான் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட இருக்கிறது என பொதுச் செயலாளர். என்ற முறையில் அறிவிக்க வேண்டும். ஆனால் அவர் அறிவிக்கவில்லை, அறிவாலயத்தில் இருந்து தலைமைக் கழகச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதுவும் தொலைபேசி மூலமாக மாவட்ட செயலாளர்களை அழைத்து அவர் அறிவித்துள்ளார்.
இது இதுவரை வரலாற்றில் நடந்ததே கிடையாது, பொதுச் செயலாளருக்கே இந்த விவகாரம் தெரியாது அப்படி இருக்கிறது திமுகவில் துரைமுருகனின் செல்வாக்கு எனக் கூறியது வேறு தற்பொழுது மேலும் பல சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சீனியர் லீடர்க்கே இந்த நிலைமையா? என கமெண்ட்கள் பறக்கின்றன.