Kathir News
Begin typing your search above and press return to search.

ஆவினை நம்பிய குழந்தைகளின் வளர்ச்சியில் விளையாடுவதா.. அண்ணாமலை குற்றச்சாட்டு..

ஆவினை நம்பிய குழந்தைகளின் வளர்ச்சியில் விளையாடுவதா.. அண்ணாமலை குற்றச்சாட்டு..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  21 Nov 2023 1:15 AM GMT

பச்சை நிற பால் வரும் 25ம் தேதி முதல் சில்லரை விநியோகம் நிறுத்த ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறிப்பாக பல்வேறு கட்சி தலைவர்களும் தன்னுடைய கண்டனத்தை தெரியப்படுத்தி இருந்தார்கள். ஏனெனில் பல்வேறு மக்கள் ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் பாக்கெட் நம்பி இருக்கிறார்கள். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பால் ஆவின் வினியோகம் செய்யப்படுகிறது. ஆவின் 4 வகையான பால் பாக்கெட்டுகளை வினியோகம் செய்யப்படுகிறது.


2 முறை சமன்படுத்தப்பட்ட பால், சமன்படுத்தப்பட்ட பால், அதிகளவு விற்பனையாகக் கூடிய நிலைப் படுத்தப்பட்ட பால் பச்சை நிற பாக்கெட்டில் வினியோகிக்கப் படுகிறது. குறிப்பாக ஆவின் நிறுவனம் உற்பத்தி செய்யும் பச்சை நிற பால்பாக்கெட் அதிக கொழுப்பு சத்துடன் இருப்பதன் காரணமாக இதன் விலை அரசு நிறுவனமாக ஆவின் நிறுவனம் 44 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது. அதன் காரணமாக ஆவின் நிறுவனத்துக்கு நஷ்டம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



இது தொடர்பாக அண்ணாமலை அவர்கள் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிடும், மொத்தமாக சென்னையில், சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40% பங்குள்ள, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயல் என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே 6% கொழுப்புச் சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79% கொழுப்புச் சத்தே இருப்பது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) அங்கீகரித்த பரிசோதனைக் கூடத்தில் , தமிழக பாஜக மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்தச் சோதனை அறிக்கையை அமைச்சரின் பரிசீலனைக்காக இணைத்து இருக்கிறோம்.இவ்வாறு கொழுப்புச் சத்துக்களை குறைத்து ஆவின் நிறுவனத்தின் பாலை நம்பியிருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் வேண்டுமென்று விளையாடி வருகிறது இந்த ஊழல் அரசு. மேலும், பாலில் கொழுப்புச் சத்தைக் குறைத்து விட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்து வருவதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் என்றும் பதிவிட்டுள்ளார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News