Kathir News
Begin typing your search above and press return to search.

திமுகவால் ஆர்.எஸ்.எஸ் பேரணியில் ஏற்பட்ட மாற்றம் - இடதுசாரிகளை தெறிக்கவிட்ட சங்பரிவார் பேரணி!

திமுகவால் ஆர்.எஸ்.எஸ் பேரணியில் ஏற்பட்ட மாற்றம் - இடதுசாரிகளை தெறிக்கவிட்ட சங்பரிவார் பேரணி!
X

Mohan RajBy : Mohan Raj

  |  21 Nov 2023 4:47 AM GMT

இதுதான் ஆர் எஸ் எஸ்.... தமிழகத்தில் கெத்து காட்டிய சங்பரிவார் அமைப்புகள்...

விஜயதசமியை முன்னிட்டு ஆர் எஸ் எஸ் தனது பேரணியை நடத்த வேண்டும் என கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டு காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தது. காவல்துறை அதற்கு முறையாக அனுமதி வழங்காத பட்சத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணியை நடத்தியே தீர வேண்டும் என்பதற்காக நீதிமன்றம் சென்றனர்.

இதன் காரணமாக நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது குறித்து திமுக அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் இடையேயான வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து நேற்றைய தினம் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர் எஸ் எஸ் பேரணி நடந்தது.

விஜயதசமியை முன்னிட்டு இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி முடிந்த நிலையில் தமிழகத்தில் நவம்பர் 19ஆம் தேதி நடத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவின்படி பேரணி நடந்தது. சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர், நெல்லை போன்ற பல இடங்களில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு பேரணி நடந்தது.

கோவையில் நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலம் துடியலூர் பேருந்து நிலையத்தில் தொடங்கி சேரன் காரணி விஸ்வநாதபுரம் வழியாக துடியலூர் பொருட்காட்சி மைதானத்தில் வந்து அடைந்தது. பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

காக்கி கலரில் கால் சட்டையும் வெள்ளை கலரில் சட்டையும் அணிந்து ஆர்எஸ்எஸ் சேவகர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். ஆர் எஸ் எஸ் பேரணி நடைபெற்ற இடத்தில் ஆண்கள் மட்டுமல்லாது, பெண்கள், குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் வயது வித்தியாசம் பாராமல் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்எஸ்எஸ் பேரணி குறித்து எப்படி நடைபெற்றது? கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை எப்படி? எனக்கேட்ட பொழுது பல தகவல்கள் கிடைத்தன. அதாவது இதுவரை ஆர்எஸ்எஸ் பேரணி தமிழகத்தில் நடைபெற்றால் குறைந்த அளவிலே ஆட்கள் கலந்து கொள்வார்கள், ஆனால் இப்பொழுது அதிக அளவில் ஆட்கள் கலந்து கொள்வதை பார்க்க முடிகிறது என கூறினர்.

கோவையில் மட்டும் ஆர்எஸ்எஸ் சீருடையில் 700 பேர் ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன, இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தில் இந்த வருடம் புதிது புதிதாக நிறைய பேர் சீருடை அணிந்து கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

----Video---

குறிப்பாக பெண்கள் மத்தியில் ஆர்எஸ்எஸ் ஊரவலத்திற்கு அதிக வரவேற்பு ஏற்பட்டுள்ளது, குழந்தைகள் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் கலந்து கொள்வதும் இந்த ஆண்டு அதிகமாகி இருக்கிறது எனவும் வேறு களத்தில் இருந்து கூறுகின்றனர். ஆர் எஸ் எஸ் ஊர்வலத்தை நடத்த திமுக அரசு கட்டுப்பாடுகள் மற்றும் தடை விதித்தது ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அரசியல் ரீதியாக ஏதுவாக அமைந்துவிட்டது எனவும் தடை விதிக்காமல் இருந்திருந்தால் இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்காது, தடைவிதித்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தமிழகத்தில் ஆழமாக வேரூன்ற திமுக அரசு காரணமாக அமைந்துவிட்டது எனவும் இனி ஆர் எஸ் எஸ் வருடா வருடம் நடத்தும் பேரணியில் கூட்டம் அதிகமாகும் தவிர குறையாது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News