'ஒரே போன்கால்! அலறியடித்த இலங்கை...' - ராமேஸ்வரத்தில் நிர்மலா சீதாராமன் செய்த சம்பவம்
By : Mohan Raj
மோடியை தெய்வமாக பார்க்கும் தமிழக மீனவர்கள்! ஒரே போன் காலில் சாதித்து கட்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தமிழக கடலோர பகுதியான நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள பெரும்பாலான மீனவர்கள் வங்கக்கடலில் மீன் பிடிக்கும் பொழுது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்கள் வலை மற்றும் படகுகளை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி வரும் அதிக அளவில் நடந்து வந்தது.
இலங்கை மற்றும் இந்தியா இடையிலான சர்வதேச எல்லை குறித்த வரையறை மேலும் சர்வதேச எல்லை பற்றி அதிகம் அறியாத மீனவர்கள் கடலில் அவ்வப்போது திசை மாறி சர்வதேச எல்லையை நெருங்கி விடுவதும், அப்படி தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையை நெருங்கும் பொழுது இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் தொடர்கதை. இதில் பல பேர் கைது செய்யப்பட்டு இலங்கை நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், மேலும் பல பேர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டும், கண்மூடித்தனமாக சுடப்பட்டும் இறந்த செய்திகளும் காலம் காலமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி ஆட்சி அமைந்ததற்கு பிறகு இந்த இலங்கை கடற்படை விவகாரத்தில் ஒரு விடிவு காலம் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது, அதை தமிழக கடலோர மீனவர்களும் ஆம் என்று ஒப்புக்கொள்ள அதை நிரூபிக்கும் வகையில் தற்போது ஒரு வரலாற்று சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அதாவது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் தமிழக மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது இந்திய அரசு, நேற்று முன்தினம் தமிழக கடற் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் திடீரென இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர், அந்த மீனவர்களின் குடும்பம் தவித்தது! எங்கள் வாழ்வாதாரமே போய்விட்டது, இப்படி கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்களை அநியாயமாக இலங்கை கடற்படை கைது செய்து விட்டதே என கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்கள் குடும்பம் தவித்தன.
இந்த விஷயம் உடனடியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கையாக தற்பொழுது கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்களும் 24 மணி நேரத்திற்குள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அப்படி விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் பாம்பன் வந்து இறங்கியதும் பிரதமர் மோடி தான் காரணம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தான் காரணம் எனக்கூறி நெகிழ்ந்த சம்பவம் நடந்துள்ளது.
முன்னதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அந்த 22 மீனவர்களின் குடும்பத்தினர் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் கடலுக்கு சென்று மீன்பிடித்துக்கொண்டு இருந்த சமயம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டார், எப்படியாவது மீட்டு கொண்டு வாருங்கள் தாருங்கள் அம்மா என வேண்டுகோள் விடுத்தனர். இதனை அடுத்து நிர்மலா சீதாராமன் இந்த விவகாரத்தை உடனே அங்கிருந்தபடியே வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு எடுத்துச் சென்றார், அவசர கதியில் இந்த விஷயத்தை எடுத்து சென்று இது உடனடியாக செய்தாக வேண்டும் என நிர்மலா சீதாராமன் மத்திய வெளியூர் துறை அமைச்சரகத்திற்கு அழுத்தம் கொடுத்தார்.
இதனை அடுத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக இந்த விவகாரத்தில் அவசரம் காட்டி இலங்கை அரசுக்கு தொடர்பு கொண்டு பேசியதும் இலங்கை அரசுக்கு இந்தியா தொடர்பு கொண்டு பேசிய காரணத்தினால் இலங்கை அரசு இந்தியா உடனான நட்புறவு முக்கியம் எனக் கூறி தற்பொழுது இந்த 22 மீனவர்களை விடுதலை செய்துள்ளது.
அதனை தொடர்ந்து 22 மீனவர்களும் இன்று ராமேஸ்வரம் திரும்பினார், அப்போது செய்தியாளர்களை சந்தித்த மீனவர்கள் 'கைதான 24 மணி நேரத்திற்குள்ளவே நாங்கள் திரும்பி விட்டோம் இதற்கு மோடி தான் காரணம்! மோடி அரசுக்கு நன்றி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி எனக்கூறி நெகிழ்ந்தனர்.
இப்படி வரலாற்றில் முதன்முறையாக கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டது குறித்து பல மீனவ கிராமங்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோல் வரலாற்றில் நடந்தது கிடையாது, மோடி அவர்களுக்கு நன்றி என கைது செய்யப்பட்ட மீனவர்கள் மட்டுமல்லாது அப்பகுதி மக்கள் முழுவதும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.