'போதும் குருநாதா முடியல!' டெல்லிக்கு வெள்ளைக்கொடியுடன் சென்ற அந்த மூத்த திமுக தல! கசிந்த ரகசியம்
By : Mohan Raj
முடியல போதும் நிப்பாட்டுங்க! டெல்லிக்கு பறந்த வெள்ளை கொடி! தூக்கி சென்றது யார் தெரியுமா?
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தற்பொழுது 3 ஆண்டுகளை நெருங்கி வருகிறது, இந்த மூன்றாவது ஆண்டில் தொடர்ச்சியாக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை ரெய்டு நடத்தி வருவது திமுக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
முதலில் சிக்கிய செந்தில் பாலாஜி விஷயத்திலேயே திமுக அரசு பெரும் பின்னடைவை சந்தித்தது, அதன் பிறகு பொன்முடி அவரது மகன் கௌதம சிகாமணி அதன் பிறகு ஜெகத்ரட்சகன் தற்பொழுது எ.வ.வேலு என தொடர்ச்சியாக திமுகவின் முக்கிய புள்ளிகள் ரெய்டில் சிக்கி இருக்கும் காரணத்தினால் பொருளாதார ரீதியாக திமுக இதற்கு இது சிக்கல் தான் எனவும் கருத்துக்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மணல் விவகாரத்தில் திமுக பெரும் ஆபத்தை சந்திக்கப் போகிறது அது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் முதல்வர் குடும்பத்தை நோக்கித்தான் வருகிறது எனவும் பல அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர், அவர்கள் மணல் ரெய்டு விவகாரம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தொடர் ரெய்டு மற்றும் பின்னடைவு காரணமாகவும் தேர்தல் நேரத்தில் நிதியை எடுக்க முடியாமல் முடங்கிக் கிடக்கும் காரணமாகவும் டெல்லிக்கு வெள்ளை ஒன்று பறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அரசு விமர்சகர் சவுக்கு சங்கர் கூறும் பொழுது சில விஷயங்களை கசிய விட்டுள்ளார். அதாவது அவர் கூறும் பொழுது தொடர் ரெய்டு மற்றும் அதிரடி நடவடிக்கைகளால் திமுக என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறது, கடந்த வாரம் முதல்வர் ஒரு நான்கு, ஐந்து நாள் ஓய்வில் இருந்ததற்கு காரணம் இதுவும் ஒன்று. முதல்வர் கடும் அசட்டில் இருக்கிறார், அதனால் இந்த சமாதானம் பேசும் வேலையை தற்பொழுது டி.ஆர்.பாலு செய்துள்ளார்.
வெள்ளைக்கொடியுடன் டெல்லியை அவர் நெருங்கியுள்ளார், டெல்லியிடம் அவர் எங்களை எதுவும் செய்யாதீர்கள் விட்டுவிடுங்கள் போதும் நாங்கள் சரணடைந்து விட்டோம் என அவர் சரணடைந்து விட்டார் டெல்லியும் அமைதியாக கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் டெல்லி எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நான் யோசிக்கிறேன் டெல்லி இந்த விவகாரத்தில் திமுகவுடன் சரண் அடைவதை ஏற்றுக்கொள்ளாது, ஏனெனில் இவர்கள் இப்பொழுது சரணடைந்து விட்டு பின்பு தங்கள் வேலையை காட்டுவார்கள்! என டெல்லிக்கு தெரியும் அதனால் இதுதான் சமயம் என டெல்லி திமுகவிற்கு எதிரான நடவடிக்கைகளை இன்னும் அதிகமாகத்தான் போகிறது என வேறு கூறியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினருமான டி.ஆர்.பாலுவே டெல்லியிடம் சரணடைந்தது தேர்தல் வரும் நிலையில் நேரத்தில் திமுகவிற்கு ஏதும் ஆகி விடக்கூடாது என்பதற்காகத்தானே தவிர மற்றபடி ஒன்றும் கிடையாது என சவுக்கு கூறியது வேறு ஒரு நேர்காணனில் மட்டும் ஒன்றும் கூறினார்.
அந்த நேர்காணலில் ஏற்கனவே ஒரு முறை முதல்வர் மருமகன் மூலமாகவும் சமாதான தூது அனுப்பி உள்ளனர், ஆனால் இந்த முறை சமாதான தூது சென்றது டி,ஆர்.பாலு எனவும் சவுக்கு சங்கர் கூறியுள்ளார். தொடர் சமாதானங்களை கேட்டுக்கொண்ட டெல்லி எதுவும் கூறாமல் அமைதியாக இருப்பது திமுகவிற்கு நல்லது அல்ல எனவும் சவுக்கு சங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஐந்து மாத காலத்தில் தேர்தல் வரவுள்ள நிலையில் திமுக பொருளாதார ரீதியாக மொத்தமும் முடங்கி விட்டது அவர்கள் தேர்தல் செலவிற்கு பணத்தை வெளியில எடுப்பதே சிரமம் எனவும் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
'