சரியாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வைத்த குறி! தொக்காக சிக்கிய அமைச்சர் சேகர்பாபு.....
By : Mohan Raj
சரியாக நிர்மலா சீதாராமன் அடித்த அடி.... வந்து சிக்கிய அமைச்சர் சேகர்பாபு...
கடந்த இரு தினங்களுக்கு முன்பு உலக மரபு வார விழாவை முன்னிட்டு மதுரை தியாகராஜர் கல்லூரியில் ஐந்து நாட்கள் குடவரை கோவில் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
தொடங்கி வைத்து அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசும் பொழுது, 'தமிழகத்தில் உள்ள பாரம்பரியத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்பு இல்லை எனும் மன வேதனை என்னிடத்தில் இருந்தது. தமிழக பாரம்பரியத்தை மக்களுக்கு எடுத்துக் கூறும் போது அரசியல் நுழைகிறது, பாரம்பரியம் இதுவல்ல என பல சர்ச்சைகள் வருகின்றன. ஜனநாயக நாட்டில் சர்ச்சைகள் வரலாம், எல்லோரும் எல்லாம் பேசலாம் தமிழக பாரம்பரியத்தை நமது முன்னோர்கள் பாறைகளில் அருமையாக வடிவமைத்திருக்கிறார்கள்.
அமைச்சர் வருகிறார் என பாரம்பரிய இடங்களில் வெள்ளையடித்து விடுகிறார்கள், வெள்ளையடிக்கப்பட்டதற்கு பின்னால் உள்ள சரித்திரம் யாருக்கும் தெரிவதில்லை என கூறினார். மேலும் அவர் பேசும் பொழுது நம்முடைய ஆணிவேரே தமிழ் பாரம்பரியம் தான் அதை நாம் பாதுகாக்க வேண்டும். மாணவர்கள் டாக்டர் இன்ஜினியர்கள் என எது வேண்டுமானாலும் ஆகலாம் ஆனால் நம்முடைய தமிழ் மரபுகளை அறிந்து அவற்றை பாதுகாக்க வேண்டும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலின் சொத்துக்களையும் திருடி வருகிறார்கள். கோவிலில் திருடப்படும் சொத்துக்கள் யாருக்கு போகின்றன என தெரியவில்லை' என பேசினார்.
இந்த விவகாரம் தான் தற்பொழுது அமைச்சர் சேகர்பாபு அவர்களை தற்போது கோர்த்துவிட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் சேகர்பாபு பேசி சிக்கியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சருக்கு பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்பொழுது 'திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பக்தர்களின் குறையை போக்க 'குறைகளை பதிவிடுங்கள்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தோம், திமுக பல ஆன்மீக புரட்சிகளை செய்து வருகிறது.
தமிழகத்தில் திமுக இந்துக்களுக்கு எதிரான ஆட்சியை செய்கிறது என்ற பிம்பத்தை மத்திய அரசு ஏற்படுத்த முற்பட்டது, அதில் தோல்வி அடைந்தார்கள். கோவில் சொத்துக்கள் திருடப்படுகின்றன என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் உயர் பொறுப்பில் இருக்கும் அவர் உரிய ஆதாரத்துடன் தெரிவித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாராக இருக்கிறது. எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் நேரடியாக முன் வைத்தால் அதற்குண்டான விளக்கமும் தவறு நடந்திருந்தால் அதன் மீது தான் நடவடிக்கையும் எடுக்க அறநிலையத்துறை தயாராக இருக்கிறது. கோவில்களை அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது' என கூறினார்.
தற்பொழுது அறநிலையத்துறை எந்த புகார் கொடுத்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறது என கூறியதுதான் திமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது. இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக புகார்கள் அதிகமாக எழுப்பப்படலாம் வலதுசாரிகள் தரப்பில் இருந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கோவில்கள் நிலங்கள் ஆக்கிரமிப்பு, கோவிலில் நிலங்களை முறைகேடாக பயன்படுத்துவது குறித்த பொதுநல வழக்குகள் அதிகமாக தொடரப்பட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அறநிலையத்துறை அமைச்சர் ஆதாரங்கள் கொடுத்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயார், ஆதாரங்களை கொடுங்கள் என கூறியதை தொடர்ந்து ஆதாரங்களை கொடுக்க நாங்கள் தாயார் ஆனால் நடவடிக்கை எடுக்க அமைச்சர் தயாராக என தற்போது வளர்த்துசாரிகள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு பதில் அளிக்கிறேன் என அமைச்சர் சேகர்பாபு வசமாக சிக்கிவிட்டார் எனவும் கருத்துக்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது....