Kathir News
Begin typing your search above and press return to search.

ஏலகிரி ஆடியோ, மணல் ஊழல் டாக்குமெண்ட். - துரைமுருகனுக்கே தண்ணி காட்டும் திமுக உடன்பிறப்பு....

ஏலகிரி ஆடியோ, மணல் ஊழல் டாக்குமெண்ட். - துரைமுருகனுக்கே தண்ணி காட்டும் திமுக உடன்பிறப்பு....
X

Mohan RajBy : Mohan Raj

  |  24 Nov 2023 2:06 AM GMT

நீலகிரி ஆடியோ! மணல் ஊழல் ஆவணங்கள்! துரைமுருகனை சிக்கவைக்க இறங்கிய திமுக நிர்வாகி..

திமுக நிர்வாகி குடியாத்தம் குமரன் சமூகவலைத்தளங்களில் அடிக்கடி வீடியோ வெளியிடுவார், அதன் காரணமாகவே இவர் சர்ச்சைகளுக்கு பெயர்போனவர். கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் ஆகியோரை விமர்சித்த காரணத்தினால் இவர் மீது காவல்துறையில் வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், இதுகுறித்து தனது முகநூல் பதிவில் குடியாத்தம் குமரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், 'என்னை நீக்க பார்க்கிறார்கள், என் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறேன்' என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

குடியாத்தம் குமரன் இது சம்பந்தமாக பேசும் போது கூறியதாவது 'முகநூல் பக்கத்தில் அப்படி பதிவிட்டது உண்மைதான், நான் குடியாத்தம் பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளிடம் பணம் வசூல் செய்வதாக என்னிடம் கட்சியினர் யாரும் பேசக்கூடாது என்று கதிர் ஆனந்த் கட்டளை போட்டிருக்கிறார். நான் கதிர் ஆனந்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதற்கு உரிய பதில் சொல்லவில்லை, நான் மண்ணுக்குள் போகும் வரை திமுகவின் உடன்பிறப்பு தான். அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்த் ஆகிய இருவரும் ஏலகிரி மலை பங்களாவில் பேசிய முக்கியமான ஆடியோ பதிவுகளை வைத்திருக்கிறேன். மணல் விவகாரங்களில் நடந்த ஊழல் சம்பந்தமான ஆவணங்களும் கிடைத்து இருக்கின்றன அவற்றையெல்லாம் விரைவில் வெளியிடுவேன் அதே சமயம் எந்த நேரத்திலும் என் குடும்பத்தாருடன் கைது செய்யப்படலாம்' என பல குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்.

இது குறித்து அமைச்சர் துரைமுருகன் தரப்பு மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது, அமைச்சர் துரைமுருகன் இதுகுறித்து கூறும்போது 'குடியாத்தம் குமரன் பகல் நேர குடிகாரர், அவர் மீது அவதூறு வழக்குகள் இருக்கின்றன! கட்சியில் இருந்து கொண்டே அமைச்சர் பற்றியும் கதிர் ஆனந்த் பற்றியும் சில ஆண்டுகளாக தவறாக பேசி வருகிறார். இதில் எதுவும் உண்மை இல்லை! ஆதாரங்கள் இருந்தால் வெளியிடச் சொல்லுங்கள், ஒவ்வொரு முறையும் இப்படி ஏதாவது சொல்லி விட்டு கடைசியில அமைச்சர் துரைமுருகன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்' என துரைமுருகன் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

இப்படி குடியாத்தம் குமரன் கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகன் பேசிய முக்கிய ஆடியோ இருப்பதாகவும், மணல் ஊழல் விவகாரம் குறித்து முக்கிய ஆவணங்களை வெளியிடுவேன் என கூறியது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இத்தனைநாள் வரையில் திமுகவில் உட்கட்சி பூசல்கள் இருந்தாலும் வெளியே செய்திகளில் கசியாமல் பார்த்துக்கொண்டது அறிவாலயம், ஆனால் தற்பொழுது வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டனர்.

அதுவும் குறிப்பாக கட்சியின் பொதுச்செயலாளர் மீது கட்சியை சேர்ந்த ஒரு நிர்வாகி ஆடியோ வெளியிடுவேன், ஊழல் பற்றிய ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது எனக் கூறியது அறிவாலயத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இது போன்ற சலசலப்புகள் திமுகவிற்கு பின்னடைவை எனவும் அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது, இது மட்டுமல்லாமல் ஏற்கனவே மணல் விவகாரத்தில் அமலாக்கத்துறை ஐஏஎஸ் அதிகாரிகள் 10 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் இப்படி துரைமுருகன் பெயரை மணல் ஊழல் விவகாரத்தில் சேர்த்து வைத்து ஆவணங்களை வெளியிடுவேன் என குடியாத்தம் குமரன் கூறியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆக வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் மீண்டும் இந்த முறை தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆவதற்கு திட்டமிட்டு வருகிறார் அதனால் தான் கதிர் ஆனந்தை குறி வைக்கிறார் குடியாத்தம் குமரன் என கூறப்படுகிறது இருந்தாலும் ஒரே கட்சியில் இருந்து கொண்டே ஆடியோ வெளியிட்டு விடுவேன் ஊழல் ஆவணங்கள் என்னிடம் இருக்கிறது என கட்சி நிர்வாகி கூறுவது கண்டிப்பாக சாதாரண விஷயமாக இருக்காது இதன் பின்னணியில் ஏதோ ஒன்று இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

பிற கட்சியினரை ஆடியோ வெளியிடுகிறார்கள், ஆவணங்களை மறைத்து வைத்து வெளியிடார்கள் என விமர்சித்து வந்த திமுகவிற்கே அதுவும் திமுகவின் பொது செயலாளருக்கே இந்த நிலையா இணையத்தில் கமெண்ட்கள் பறக்கிறது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News