Kathir News
Begin typing your search above and press return to search.

"திமுக அரசு பயபடுகிறதா? "அண்ணாமலை கிடுக்குப்பிடி!

திமுக அரசு பயபடுகிறதா? அண்ணாமலை கிடுக்குப்பிடி!
X

SushmithaBy : Sushmitha

  |  24 Nov 2023 2:53 PM

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் மணல் சட்டவிரோதமாக அள்ளப்பட்ட விவகாரத்தில் வேலூர் திருச்சி கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகும் படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் தமிழக அரசு இந்த சம்மனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் இந்த வழக்கு குறித்த விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தது. இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதாவது, மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் வேண்டும். ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க அரசின் இந்த கோழைத்தனமான நடவடிக்கை, ஆட்சிக்கு வந்த நாள் முதல் நமது மாநிலத்தின் வளங்களை சுரண்டிய குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற திமுகவின் நடுக்கத்தைத்தான் உணர்த்துகிறது. மணல் குவாரி முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை விசாரிக்காமல் தடுக்க, திமுக அரசு முயற்சிப்பது ஏன்?


தங்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக, வேண்டுமென்றே அரசுக்கு ஏற்படுத்திய இழப்பு, அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகிவிடும் என்று ஊழல் திமுக அரசு பயப்படுகிறதா? என்று பதிவிட்டுள்ளார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News