'நாத்தம் புடிச்ச பதவி....' திமுக சேர்மன் ஆதங்கம் - திமுக நிர்வாக அவலத்தை படம் போட்டு காட்டும் அந்த வீடியோ படு வைரல்...
By : Mohan Raj
கமிஷன் பிரிப்பதில் அடித்துக் கொண்ட உடன்பிறப்புகள்.... இணையம் முழுவதும் வைரலாகும் வீடியோ...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி திமுக கூட்டணிக்கு 12 கவுன்சிலர்கள், அதிமுகவிற்கு ஒரு கவுன்சிலர், எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு கவுன்சிலர் மற்றும் இதர ஏழு பேர் சுயேச்சை என மொத்தம் 21 கவுன்சிலர்கள் உள்ளனர்.
நகராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த சபானாஸ் ஆபிதா. துணை தலைவராக ஹமீது சுல்தான் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 21 வார்டுகளுக்கும் தெரு விளக்குகள் பொருத்த 1.18 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு மூன்று சதவீத கமிஷன் நகராட்சி தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த கமிஷன் தொகையை எதற்காக கவுன்சிலர்களுக்கெல்லாம் பிரித்து தரணும் அதெல்லாம் தர முடியாது எனக்கூறி நகராட்சித் தலைவரின் தங்கை ஹமிதா நகராட்சித் தலைவர் ஷபானா ஆபிதா ஆகியோர் அவரது சகோதரர் இஸ்திகா ஹசன் ஆகியோர் முன்னிலையில் நகர் மன்ற அலுவலகத்தில் கவுன்சிலரிடம் ஆக்ரோஷமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் பேசும் பொழுது 'இவ்வளவு செலவு பண்ணிட்டு பதவிக்கு வந்து இருக்கோம், என்ன சும்மாவா வந்திருக்கோம்? பணத்தை எல்லாம் யாருக்கும் பிரிச்சு கொடுக்க முடியாது, சொத்துக்களை எல்லாம் வித்துதான் 2 கோடி ரூபாய் கொடுத்து தான் இந்த சீட்டு வாங்கிருக்கோம்... ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் 10 முதல் 20 லட்சம் வரை பணம் கொடுத்து சேர்மன் ஆகியிருக்கோம் என ஆவேசமாக பேசிய வீடியோ சமூக வலை தரத்தில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் அந்த வீடியோவில் 'நாத்தம் பிடித்த இந்த சேர்மன் பதவிக்கு இவ்வளவு செலவழிச்சு வந்து உட்கார்ந்து பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கோம், பிச்சை எடுக்குறதுக்கு எதுக்கு இங்க வரணும்? காசை எதுக்கு பிரித்து கொடுக்கணும்? யாருக்கு வேணும் இந்த நாத்த அரசியல்? தலை முறை தலைமுறையா உட்கார்ந்து சாப்பிட சொத்து இருக்கு, இங்க 1000க்கும், 1500 க்கும் பங்கு போட்டு இருக்கனுமா? என கூறுவது திமுக கவுன்சிலர்கள் மற்றும் சேர்மன் இடையே நடக்கும் அவலத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
இந்த வீடியோ தான் சமூக வலைதளத்தில் தற்பொழுது வைரலாக பரவி வருகிறது, தமிழகத்தின் பல இடங்களில் மாநகராட்சி, நகராட்சி என பல பகுதிகளில் அங்கிருக்கும் கவுன்சிலர்கள் மற்றும் சேர்மன், மேயர் போன்றவர்கள் மத்தியில் இதுபோன்று சர்ச்சைகள் ஏற்படுவதும் அது தொடர்ச்சியாக செய்திகளாக வெளி வருவதும் அறிவாலய தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இப்படி கட்சியிலேயே அடித்துக் கொண்டிருப்பது நிச்சயம் திமுக அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்துவிடும் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.