Kathir News
Begin typing your search above and press return to search.

இதுதான் பாஜக வளர்ப்பு...! - கிண்டல் செய்தவர்களுக்கு செயலால் பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்

இதுதான் பாஜக வளர்ப்பு...! - கிண்டல் செய்தவர்களுக்கு செயலால் பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்
X

Mohan RajBy : Mohan Raj

  |  1 Dec 2023 3:06 PM GMT

கோரிக்கை வைத்த ராமநாதபுரம் மக்கள் உடனடியாக தாமதிக்காமல் நிர்மலா சீதாராமன் செய்த காரியம்....

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு தற்பொழுது செய்த காரியம் ஒன்றுதான் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் முக்கிய அமைச்சராக இருந்தாலும் தமிழக மக்களுக்கு ஏதாவது ஒரு காரியம் ஆகவேண்டும், தமிழக மக்களுக்கு ஏதாவது ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றால் அவரிடம் கோரிக்கை வைத்தால் உடனடியாக செய்யப்படும் என பல தருணங்களில் கூறப்பட்டு வந்துள்ளது அதனை தற்போது மீண்டும் நிரூபிக்கும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிட்டத்தட்ட ஆறு கிராம மக்களுக்கு பெரும் உதவி செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு முறை பயணமாக வந்திருந்தார், அப்போது சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நிர்மலா சீதாராமன் அவர்களை ராமநாதபுரம் மாவட்டம் மக்கள் சந்தித்துள்ளனர். அப்பொழுது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலந்தை, கானனை, பெரிய தாமரைக்குடி, சின்ன தாமரை குடி, திரிபுனை உள்ளிட்ட ஆறு கிராமங்களுக்கு உள்ள ரயில் பாதையை சுரங்கப்பாதை வழியாகத்தான் கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. ஆனால் மழைக்காலங்களை அந்த சுரங்கப்பாதைகளின் நீர் தேங்கி நிற்கிறது, எங்களால் அவசரத்திற்கு கூட செல்ல முடியவில்லை இது மட்டும் அல்லாமல் ஆம்புலன்ஸ், பள்ளி செல்லும் மாணவர்கள் எல்லோரும் அவதிப்படுகின்றனர் குறைந்தபட்சம் எங்களுக்கு பழைய முறையில் ரயில்வே கேட்டாவது இருந்தால் கூட நாங்கள் காத்திருந்தாவது ரயில்வே பாதையை தாண்டி சென்று விடுவோம் ஏதாவது நீங்கள்தான் பார்த்து செய்ய வேண்டும் அம்மா' என இந்த ஆறு கிராம மக்களும் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

உடனடியாக அவர்களது கோரிக்கையை புரிந்து கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது டெல்லி சென்றவுடன் அதற்கான நடவடிக்கை எடுத்து கிட்டத்தட்ட வெற்றியடையும் தருவாயில் அதனை முடித்து காட்டியிருக்கிறார், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இந்த ஆறு கிராம மக்களின் பிரச்சினையை எடுத்துக் கூறியது மட்டுமல்லாமல் இந்த ஆறு கிராமத்திற்கு தற்காலிகமாக தற்பொழுது உடனடியாக ஒரு ரயில்வே கேட் கீப்பரை நியமித்து அந்த ரயில்கள் வரும் பொழுது செயற்கை முறையில் பழைய நடைமுறைப்படி ரயில்வே கேட் இயங்க வேண்டும், ஆனால் இவர்களுக்கு வரும் காலங்களில் மேலும் பிரச்சினை ஏற்படாமல் இருக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளார்.

அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் இதனை உடனடியாக செய்து தர ஏற்பாடு செய்கிறேன் எனக் கூறி வாக்குறுதி கொடுத்துள்ளார், இப்படி நிதி அமைச்சராக இருந்தும் 6 கிராம மக்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உடனடியாக தனது அலுவல்கள் இருந்தாலும் அதற்கான நேரம் ஒதுக்கி ரயில்வே அமைச்சரை தனியாக சந்தித்து இது போன்ற கோரிக்கையை எடுத்து வைத்து அதற்கு ரயில்வே அமைச்சரிடம் ஒப்புதல் வாங்கியது குறித்து இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை நிர்மலா சீதாராமன் அவர்களை இடதுசாரிகள் குறிப்பாக திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள் கார்ட்டூன், மீம்ஸ், வீடியோ மீம்ஸ் வைத்து கிண்டல்கள் கேலி செய்து வந்தாலும் அவர் தமிழகத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நோக்கமாக வைத்துக் கொண்டுதான் செயல்படுகிறார் என இதன் மூலம் நிரூபணமாகிறது என இணையத்தில் கமெண்டுகள் பறக்கின்றன.

மேலும் இது குறித்து பாஜக நிர்வாகிகளிடம் பேசும் பொழுது 'திமுக மட்டும் அதன் கூட்டணி கட்சிகள் கோபாலபுரம் குடும்பத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் தான் யோசிப்பார்கள், ஆனால் பாஜகவின் வளர்ப்பு அப்படி அல்ல மக்களுக்கு என்ன தேவை எது செய்தால் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்! அதற்காகத்தான் நாம் இங்கு பதவியில் உள்ளோம் என நன்கு புரிந்து கொண்டவர்கள். அதன் காரணமாகத்தான் நிதி அமைச்சராக இருந்தாலும் இதனை காலம் தாழ்த்தாமல் உடனே அந்த மக்களின் நிலையை புரிந்து கொண்டு ரயில்வே அமைச்சரிடம் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். இன்னும் சில நாட்களில் அந்த ஆறு கிராமங்களுக்கு உண்டான ரயில்வே கேட் செயல்பாட்டுக்கு வந்து விடும் இதுதான் பாஜகவின் வளர்ப்பு' என கூறினார்கள். இந்த விவகாரம் தான் தற்பொழுது சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News