Kathir News
Begin typing your search above and press return to search.

சத்தீஸ்கர் பா.ஜ.க வேட்பாளர் முன்னிலை.. அரசியல் பின்னணி இல்லாத அவருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?

சத்தீஸ்கர் பா.ஜ.க வேட்பாளர் முன்னிலை.. அரசியல் பின்னணி இல்லாத அவருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 Dec 2023 1:04 AM GMT

சத்தீஸ்கர் நாடாளுமன்ற தேர்தலில் தற்பொழுது பாஜகவின் ஈஸ்வர் சாஹு 41,232 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். INC வேட்பாளர் ரவீந்திர சவுபே 36,104 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார் வேட்பாளர். குறிப்பாக எந்த அரசியல் பின்னணியும் இல்லாத பாஜகவின் வேட்பாளரான இவர் காங்கிரசை எதிர்த்து தற்போது வெற்றி பெற்று இருக்கிறார். ஆனால் இவருடைய வெற்றிக்கு பின்னணியில் ஒரு சமூகத்தின் வெற்றியை அடங்கி இருப்பது உங்களுக்கு தெரியுமா? அவருடைய கதை உங்களுக்காக இதோ!


இந்த வருடம் அவரது மகன் ஒரு கும்பல் வன்முறையில் கொல்லப்பட்டார். வழக்கம் போல் காங்கிரஸ் கலவரக்காரர்களுக்கு ஆதரவாக இருந்தது. ஆனால் தற்பொழுது இவர் வெற்றி பெற்று இருப்பது இவருடைய பின்னணியில் உள்ள ஒட்டுமொத்த சமூகத்தின் எழுச்சிக்கும் வழிவகுக்கும் என்று சமூக வலைத்தளங்களில் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பெமேத்ரா மாவட்டத்தின் சாஜா சட்டமன்றத்திலிருந்து ஈஸ்வர் சாஹுவை பாஜக வேட்பாளராக நியமித்துள்ளது. ஈஸ்வர் சாஹுவுக்கு எந்த அரசியல் பின்னணியும் இல்லை. ஈஸ்வர் சாஹு இந்த ஆண்டு 2023, ஏப்ரல் 8 ஆம் தேதி அவரது மகன் புனேஷ்வர் சாஹு கொல்லப்பட்ட போது வெளிச்சத்திற்கு வந்தார்.

ஈஸ்வர் சாஹு சாஜா சட்டமன்றத் தொகுதியின் பிரன்பூர் கிராமத்தில் வசிப்பவர். இரு சமூகத்தினரிடையே உள்ள பிரச்னையால் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது. இரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் புவனேஷ்வர் சாஹு கொல்லப்பட்டார். புவனேஷ்வர் சாஹு கொல்லப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு தந்தையும் மகனும் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு எழும் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு, கிராமத்தில் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து உயர் போலீஸ் அதிகாரிகள் பீரான்பூரில் நிறுத்தப்பட்டனர்.

இரு சமூகத்தைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், சாஹு சமூகத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் சாஹு இறந்ததையடுத்து, அவரது குடும்பத்திற்கு அரசு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்குவதாகவும் அறிவித்தது. ஆனால் புவனேஷ்வர் சாஹுவின் குடும்பத்தினர் அதை நிராகரித்துள்ளனர். தற்போது பாஜக இறந்த புவனேஷ்வர் சாஹுவின் தந்தை ஈஸ்வர் சாஹுவை சாஜா சட்டமன்ற வேட்பாளராக நியமித்துள்ளது.


எந்த அரசியல் பின்னணியும் இல்லாத 48 வயதான ஈஸ்வர் சாஹுவை வேட்பாளராக பாஜக அறிவித்தது அவரின் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் இவர் உதவி செய்வார். ஈஸ்வர் சாஹு ஐந்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது அம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த அமைச்சர் ரவீந்திர சவுபே சஜா சட்டமன்றத்தின் எம்எல்ஏவாக உள்ளார். இம்முறையும் ஈஸ்வர் சாஹு ரவீந்திர சவுபேயை எதிர்கொள்கிறார். இன்று அவர் முன்னிலையில் இருக்கிறார்.

Input & Image courtesy: நியூஸ்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News