Kathir News
Begin typing your search above and press return to search.

'உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சுருங்க...' - தாறுமாறு அடியால்... தலைகுப்புற கவிழ்ந்த திமுக எம்.பி

உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சுருங்க... - தாறுமாறு அடியால்... தலைகுப்புற கவிழ்ந்த திமுக எம்.பி

Mohan RajBy : Mohan Raj

  |  6 Dec 2023 1:29 PM GMT

தாறுமாறாக விழுந்த அடியால் உண்டான மாற்றம்... எம்.பி செந்தில்குமார் பல்டிதான் தற்போது செம்ம வைரல்...

கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி தேர்தல் முடிவுகளை சந்தித்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி அடைந்தது. மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி பிடித்து விடக்கூடாது என்பதை குறியாக கொண்டு 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைக்கப்பட்ட I.N.D.I கூட்டணி வேலைக்காகாமல் படு தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை திமுக எம் பி செந்தில்குமார் மக்களவையில் பேசிய சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திமுக எம்பி செந்தில்குமார், இந்தி பேசும் மாநிலங்களை நாங்கள் கோமூத்திர மாநிலங்கள் என பொதுவாக அழைப்போம். அந்தப் பகுதியில் நடக்கும் தேர்தல்களில் மட்டுமே பாஜகவிற்கு வெற்றி கிடைத்திருக்கிறது! தமிழகம் கேரளா ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற தென் மாநிலங்களில் இதுவரை பாஜக அடைந்த தோல்வியையும் சுட்டி காட்டினார். இவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதோடு அவரது கருத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனங்களை தெரிவித்தார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், தி.மு.க.வின் தவறான ஆட்சியால் சென்னை மூழ்கிக்கொண்டிருக்கிறது & அதுபோலவே நாடாளுமன்ற அரங்கில் அவர்களின் சொற்பொழிவு நிலை. நமது வட இந்திய நண்பர்களை பானி பூரி விற்பவர்கள், கழிவறை கட்டுபவர்கள் என அழைத்து I.N.D.I கூட்டணியில் இருக்கக்கூடிய தி.மு.க எம்.பி செந்தில்குமார் அவமதிக்கிறார், இந்த உணர்வற்ற கருத்தை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருப்பதையும், கர்நாடகாவில் சமீப காலம் வரை ஆட்சியில் இருந்ததையும் அவர் மறந்துவிட்டார். தி.மு.க.வின் ஆணவமே அவர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்! என பதிவிட்டார்.

அண்ணாமலை தனது கண்டனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அடுத்த இரண்டு மணி நேரத்தில் முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக் கூறிய நான், தவறான பொருள் அளிக்கும் வகையில் ஒரு சொல்லைப் பயன்படுத்தி விட்டேன். எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை, அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று திமுக எம்பி செந்தில்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் மக்களவையில் தான் பேசிய கருத்திற்கு மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார்.

முன்னதாக திமுக எம்பி செந்தில் குமாரின் இந்த பேச்சை பாஜக தவிர காங்கிரஸின் சில தலைவர்களுக்கும் முக சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் வசம் இருந்த ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 2 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைப் பிடித்து விட்டது. மொத்தமாக உத்தர பிரதேசம் ராஜஸ்தான் சத்தீஸ்கரை காங்கிரஸ் இழந்ததற்கு திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன எதிர்ப்பு பேச்சு தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டு வருகின்ற நிலையில் திமுக எம்பி யின் இந்த பேச்சு இண்டி கூட்டணியிலும் எதிரொலித்ததாக கூறப்படுகிறது. திமுக எம் பி யின் பேச்சுக்கு உடனடியாக கண்டனம் தெரிவித்த அண்ணாமலை பதிவிற்கு தான் பேசியது தவறு என திமுக எம்பி மறு பதிவிட்டது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து திமுக தரப்பில் அதன் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி கூருக்கும்போது, 'நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தவறான பொருள் கொள்ளத்தக்க சொல் ஒன்றைப் பயன்படுத்தி இருந்தார். இதனை அறிந்த கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், செந்தில்குமாரைக் கடுமையாகக் கண்டித்தார்கள்' எனக்கூறி திமுகவினர் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே உதயநிதி பேசிய சனாதன விவகாரம் திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் எம்.பி செந்தில்குமாரின் இந்த அருவருக்கத்தக்க பேச்சும் திமுகவிற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News