Kathir News
Begin typing your search above and press return to search.

சி.எம் பையன்னு கூட பார்க்கலையே....! பந்தா காட்டிய அமைச்சர்களை லெப்ட், ரைட் வாங்கிய போல்ட் லேடி....!

சி.எம் பையன்னு கூட பார்க்கலையே....! பந்தா காட்டிய அமைச்சர்களை லெப்ட், ரைட் வாங்கிய போல்ட் லேடி....!

Mohan RajBy : Mohan Raj

  |  6 Dec 2023 1:31 PM GMT

உதயநிதி கூட்டத்தில் நடந்த அத்துமீறல்...! அமைச்சர் என்று பாராமல் முகத்திற்கு நேராக உதயநிதியிடம் சீறிய பெண்மணி...!

கடந்த இரண்டு நாட்களையும் திரும்பி பார்க்கும் பொழுது முழுவதுமாக சென்னை வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டிருந்து காட்சிகள் தான் நினைவுக்கு வருகிறது. ஏனென்றால் அந்த அளவிற்கு சென்னையை கடந்து சென்ற மிக்ஜம் புயலின் பாதிப்பு அதிகமாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையை நோக்கி வந்த இந்த புயலானது திங்கள் செவ்வாய் என இரண்டு தினங்களும் சென்னையை புரட்டி போட்டது பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் சென்னை மக்கள் இதுவரை கண்டிராத பெரும் துயரங்களை சந்தித்தனர். இதுவரை நீர் தேங்காத பகுதிகளில் எல்லாம் கடந்த இரண்டு தினங்களில் நீர் தேங்கியுள்ளதாக புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. பாதுகாப்பு கருவி முன்கூட்டியே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட போதிலும் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத நிலைமையில் தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரமும் இல்லாமல் மக்கள் கடும் துயரங்களை கண்டனர்.

கனமழை காரணமாக வீடு முழுவதும் நீர் நிரம்பியதால் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தன் தன் தரப்பில் மக்களுக்கு உணவுகளை வழங்கி வருகின்றனர்..

மீட்டுப்பணிகள், வெள்ள நிவாரண பணிகள் சரிவர நடப்பதில்லை என திமுக அரசின் மீது மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சென்னையில் ஒரு பகுதியில் நீர் எங்கும் இருக்காது என்று உத்தரவாதம் அளித்த சென்னை மேயர் பிரியா சமூக வலைத்தளத்தில் பல விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ரிப்பன் மாளிகையில் இருந்து 2015 ம் ஆண்டு பெய்த விட தற்போது பெய்துள்ள மழையின் அளவு அதிகம் இவ்வளவு நாள் தமிழக அரசாங்கம் கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மட்டுமே தற்பொழுது இந்த மழையை தாக்குப் பிடிக்க முடிகிறது கூறியதும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது...

இந்த நிலையில் திமுக தரப்பில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சின்ன வேளச்சேரி பகுதியில் உள்ள மக்களை காண்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அவரைப் பாதுகாக்கும் பாதுகாப்பு வீரர்கள் உதயநிதி ஸ்டாலினை மட்டும் யாரும் தொடாத வகையில் சுற்றி வளைத்துக் கொண்டு நகர்ந்து கொண்டே சென்ற சமயத்தில் ஒரு பெண்மணியை தள்ளிவிட்டுள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்மணி நான் ஒரு பள்ளி ஆசிரியை ஒரு பெண் என்று பாராமல் என்னிடம் எப்படி நீங்கள் இப்படி நடந்து கொள்ளலாம் என்று ஆவேசமாக கேள்வி கேட்டுள்ளார். ஏற்கனவே மழை வெள்ளத்தால் அரசு சரிவர இயங்கவில்லை, இதில் பாதுகாப்பு என பந்தா வேறு என அந்த பெண்மணிக்கு கோபம் அதிகரித்து அமைச்சர், முதல்வர் மகன் என்று கூட பார்க்காமல் கத்திவிட்டார்.


இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, உதயநிதி ஸ்டாலின் உடன் சென்ற அமைச்சர் கே என் நேரு மற்றும் பா சுப்பிரமணியம் அந்த பெண்மணியின் கேள்விக்கும் ஆதங்கத்திற்கும் பதிலளித்து சமாளித்தனர் ஆனால் உதயநிதி ஸ்டாலின் மௌனமாக நின்று கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மக்கள் திமுக அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர்! அதன் நிலையில் களப்பணிக்காக சென்ற முதல்வர் மகன் மீதே பொதுமக்கள் காட்டிய வெறுப்பு திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News