Kathir News
Begin typing your search above and press return to search.

லிங்குசாமிக்கு ஏன் இந்த வேலை? அஞ்சான் சமயத்துல வாங்குன அடியை விட மோசமான அடி.......

லிங்குசாமிக்கு ஏன் இந்த வேலை? அஞ்சான் சமயத்துல வாங்குன அடியை விட மோசமான அடி.......
X

Mohan RajBy : Mohan Raj

  |  7 Dec 2023 12:49 PM GMT

இதெல்லாம் தேவையா....? அஞ்சானுக்கு அப்புறம் பெரிய அடி வாங்கிய இயக்குனர் லிங்குசாமி...

கடந்த நான்கு தினங்களாக சென்னையில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது பற்றிய செய்திகள் தான் அதிக அளவில் உலா வருகிறது. குறிப்பாக கூற வேண்டும் என்றால் சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல், மக்கள் நிவாரண பொருட்கள் எதுவும் கிடைக்காமல் மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் எதுவும் நிறைவேறாமல் பலர் கோவத்தில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் திமுக அரசு சென்னை வெள்ளத்தை சரி செய்து விட்டது! திமுக அரசு சென்னை வெள்ளத்தில் சிறப்பாக செயல்படுகிறது என கூறுபவர்களை எல்லாம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி துளைத்து எடுத்து வருகின்றனர். சென்னையில் பொறுப்பு அமைச்சர் சேகர்பாபுவையே நேற்று ஒரு பகுதியில் மக்கள் மறைத்து எங்கள் தேவைகள் எதுவும் பூர்த்தியாகவில்லை என கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

இப்படி சென்னை மழை வெள்ளத்தால் அதிகம் கோபத்தில் மக்கள் இருந்து வரும் நிலையில் அதிக இடங்களை பார்க்காமல் லிங்குசாமி செய்த காரியம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து லிங்குசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவிட்டார், அதில் 'நான் தஞ்சையில் இருந்து சென்னைக்கு வந்து இறங்கினேன், சென்னை நிலவரத்தை பார்த்து கவலை அடைந்தேன்! நேற்று இரவு இங்கு வந்து இறங்கியதும் அடையாறில் ஒருவரை இறக்கி விடுவதற்காக காரில் சென்றேன். ஏர்போர்ட்டில் இருந்து அடையார் சென்று விட்டு பின்னர் வளசரவாக்கம் வரும் வரை மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் என்ன அழகாக வேலை பார்த்திருக்கிறார்கள்? 2015 ஆம் ஆண்டு வெள்ள பாதிப்பை பார்த்தாலே இந்த முறை சரியான திசையில் முன்னேறிக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்ய விரும்புகிறேன்' எனக் கூறி 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தை விட தற்போதைய வெள்ள பாதிப்பு பணிகளில் அரசு அருமையாக வேலை செய்திருப்பதாக பாராட்டி பதிவிட்டிருந்தார்.

இதுதான் தற்போது விமர்சனங்களுக்கு காரணமாக அமைந்துவிட்டது, 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பையும் தற்பொழுது ஏற்பட்டுள்ள பாதிப்பையும் ஒப்பிட்டு பல கமெண்ட்கள் இணையதளத்தில் பறக்க ஆரம்பித்து விட்டன. இந்த நிலையில் அதிமுக நிர்வாகி ஒருவர் லிங்குசாமிக்கு தொலைபேசியில் அழைத்து இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

அந்த தொலைபேசி உரையாடலில் 2015 ஆம் ஆண்டுக்கும் இப்ப உள்ள வெள்ள நிலவரத்துக்கு நீங்க வந்து நன்றாக செய்தீர்கள் என்று சொல்கிறீர்களே? எந்தெந்த ஏரியா போய் பார்த்தீங்க என லிங்குசாமியிடம் கேட்கிறார்! அதற்க்கு பதிலாக லிங்குசாமி 'நான் ஏர்போர்ட்டில் இருந்து அடையாறு சென்று பார்த்தேன், அதன் பிறகு வளசரவாக்கம் சென்றேன்' எனக் கூறினார். புறநகர் பகுதி எல்லாம் போய் பார்த்தீர்களா அங்கெல்லாம் எப்படி இருக்குன்னு தெரியுமா? என கேட்டவுடன் இல்லை நான் பதிவிட்டதே வேறு நீங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள் என லிங்குசாமி சமாளிக்க 'அப்படின்னு பாராட்ட வேண்டும் என்றால் பாராட்டிக்கொள்ளுங்கள் அதற்காக 2015 ஆம் ஆண்டை ஏன் ஒப்பிட்டு ஏன் சொல்ல வேண்டும்?' என கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுதே லிங்குசாமி பயந்து தொலைபேசியை இணைப்பை கட் செய்து விட்டு செல்லும் ஆடியோ இணையத்தில் வைரல் ஆகிறது.

இப்படி திமுக அரசை பாராட்டுகிறேன் என்ற பெயரில் 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தை குறிப்பிட்டு தற்பொழுது சூப்பராக வேலை செய்திருப்பதாக லிங்குசாமி குறிப்பிட்டு அதன் காரணமாக தற்பொழுது இணையத்தில் சிக்கி இருக்கிறார், இவர் எடுத்த அஞ்சான் பட சமயம் இணையத்தில் சிக்கியதை விட தற்பொழுது அதிக அளவில் ட்ரோல் செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News