திமுக எம்.பி. பேச்சுக்களால் வலுவடையும் பாஜக! காங்கிரஸ் - திமுக உரசல்!!
By : Sushmitha
காங்கிரஸ் தலைமையில் வழிநடத்தப்பட்டு வரும் இந்திய கூட்டணி தற்போது விரிசலைக் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் காங்கிரஸுக்கும் திமுகவிற்கும் இடையேயான உரசல் தற்போது அதிகரித்துள்ளதாம்! அதற்கு முக்கிய காரணம் திமுக அமைச்சர்கள் கூறும் சில கருத்துக்கள் என தெரியவந்துள்ளது.
அதாவது சமீபத்தில் ஐந்து மாநிலங்களின் தேர்தல்களில் தோல்வியை சந்தித்த காங்கிரஸுக்கு தனது தோல்விக்கு முக்கிய காரணமாக தங்கள் கண் முன் வந்து நிற்பது அமைச்சரும் தமிழக முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய கருத்துக்களே! இதனை பல அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த தோல்வியிலிருந்து மீளாத காங்கிரசினருக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவலை திமுகவின் எம்.பி. மக்களவையில் கூறியுள்ளார். திமுகவின் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேற்று பாஜகவால் பொதுவாக கூறப்படும் "கோ மூத்திர" மாநிலங்களில் மட்டுமே ஆட்சியைப் பிடிக்க முடியுமே தவிர தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற தென்னிந்தியாவில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று கூறினார்.
திமுக எம்பி யின் இந்த பேச்சு பெரும் எதிர்ப்பை பெற்றது, அது திமுகவும் எம்பி குறிப்பிடும் கோ மூத்திர வார்த்தையில் காங்கிரஸின் மையப்பகுதியான உத்திரபிரதேசமும் உள்ளதால் திமுக எம்பி பேச்சு காங்கிரசினருக்கு முக சுழிப்பை ஏற்படுத்தியது. இதனால் திமுக காங்கிரஸ் இடையே மற்றுமொரு உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே திமுக அமைச்சர் உதயநிதியின் சனாதன பேச்சு பாஜகவிற்கு சாதகமாக திரும்பிய நிலையில் திமுக எம்.பி. செந்தில்குமாரின் இந்த பேச்சு 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவிற்கு வலு சேர்க்கும் எனவும் கூறப்படுகிறது.
ஆதாரம்: சுயராஜ்யம்