எங்க ஓடுறீங்க, மக்களின் வழிமறிப்பிற்கு ஆளான திமுக அமைச்சர் கே. என். நேரு மற்றும் சி. வி. கணேசன்!
By : Sushmitha
சென்னையை கடந்து சென்ற மிக்ஜம் புயலால் சென்னை முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது மழை நின்று 5 நாட்களாக மழைநீர் வடியாமல் இருப்பது மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இந்த நிலையில் திமுக அமைச்சர் சி. வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், சென்னை துணை மேயர் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர்.
அந்த நிலையில் பொதுமக்கள் அமைச்சர் சி.வி. கணேசனின் காரை வழிமறித்து முறையிட்டுள்ளனர். அதாவது தங்கள் பகுதியில் மின்சாரம் வழங்கப்படவில்லை தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்படவில்லை என்று வழிமறித்து முறையிட்டனர்.
இதேபோன்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு பாதிக்கப்பட்ட பகுதியில் நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு முகாம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த குடியிருப்பு வாசலிலே அப்பகுதியில் உள்ள மக்கள் அமைச்சரின் காரை மறித்த படி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார், அதனைக் கண்ட அமைச்சர் கே என் நேரு காரில் இருந்து இறங்கி வந்து மக்களிடம் கோரிக்கையை கேட்ட பொழுது எங்கள் பகுதிக்கு இந்த மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்றும் உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர், விரைவில் மழைநீர் வடிந்த பகுதிகள் ஒவ்வொன்றிற்கும் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்த கே என் நேருவை மக்கள் கிளம்ப விடாமல் உடனடியாக மின் இணைப்பை வழங்க வேண்டும் என முறையிட்டனர்.