Kathir News
Begin typing your search above and press return to search.

'கெட் ரெடி போக்ஸ்....' - அண்ணாமலையிடம் இருந்து காவிகளுக்கு பறந்த மெசேஜ்... கேம் ஆன்......

கெட் ரெடி போக்ஸ்.... - அண்ணாமலையிடம் இருந்து காவிகளுக்கு பறந்த மெசேஜ்... கேம் ஆன்......

Mohan RajBy : Mohan Raj

  |  8 Dec 2023 2:59 PM GMT

இதுதான் நேரம்... காவிகளுக்கு கமலாயத்திலிருந்து பறந்த முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு மிகவும் குறைவான நாட்கள் உள்ள நிலையில் தமிழகத்தில் பாஜகவின் நிலையானது ஏறுமுகத்தை கண்டுள்ளது. சமீபத்தில் ஐந்து மாநிலங்களின் தேர்தலில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி கனியை பறித்தது பாஜகவிற்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது.

ஆனால் இந்த வெற்றி காங்கிரசிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, அது மட்டும் I.N.D.I கூட்டணிக்கும் திமுக விற்கும் இடையே ஒரு உரசலையும் இன்னும் தெளிவாக கூற போனால் கூட்டணியில் திமுக இனி இருக்குமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக கடந்த சில மாதங்களாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக முழுவதும் நடைபெற்று வரும் என் மண் என் மக்கள் நடை பயமானது பாஜகவிற்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. எங்கு திரும்பினாலும் பாஜகவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது அந்த அளவிற்கு கடந்த முறை தேர்தலை விட இந்த முறை தேர்தலில் பாஜகவின் செல்வாக்கு என்பது உயர்ந்துள்ளது என்றும் இதனால் நிச்சயமாக 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஒரு மாற்றத்தை காணும் இதுவரை அதிமுக திமுக என இருந்து கொண்ட மக்கள் தற்போது பாஜகவையும் ஒரு பிரதான கட்சியாக அங்கீகரிக்க ஆரம்பித்துவிட்டனர் என்று அரசியல் விமர்சகர்கள் எந்த ஒரு தயக்கமும் இன்றி தெரிவிக்கின்றனர்.

இவை அனைத்திலும் பெரிதும் பாதிப்பை தற்போது கண்டிருப்பது திமுக! ஆளும் அரசாக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளைக் கடந்தும் மக்கள் அரசின் மீது நம்பிக்கை இல்லா தன்மையை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளே திமுகவிற்கு அமைந்துள்ளது. ஏனென்றால் தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மீது நடத்தப்படும் ரெய்டு நடவடிக்கைகள், அதில் கைப்பற்றப்படும் ஆவணங்கள் ரொக்க பணங்கள் நகைகள் என அனைத்து தகவல்களும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பில் நிவாரண நடவடிக்கைகள் ஒன்றும் சரிவர நடைபெறவில்லை என்றும் மக்கள் வெள்ள நீரில் தான் மிதந்து கொண்டிருக்கிறார்கள் நிவாரண பொருட்களும் கிடைக்காமல் மின்சாரமும் இல்லாமல் அவதியுற்று வருகிறார்கள் என்ற செய்தி தமிழகம் முழுவதும் ஆளும் திமுக அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பக்கம் அண்ணாமலை தனது நடை பயணம் மூலம் பாஜகவின் செல்வாக்கை உயர்த்தியது மறுபக்கம் மக்கள் அரசின் மீது கொண்டுள்ள அதிருப்தி அந்த அதிருப்தி மேலோங்க தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு அவற்றை சமாளிக்க தமிழக முதல்வர் வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களை மேலும் கோபம் அடைய செய்கிறது.

இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொகுதி பொறுப்பாளர்களை திடீரென அழைத்து அவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தேர்தல் வேலைகள் திறம்படவும் சரியாகவும் நேர்த்தியாகவும் நடத்தி வருகின்ற பாஜக மாநில தலைவர் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதி மற்றும் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு என்று ஒவ்வொரு பொறுப்பாளர்களை அவர் நியமித்துள்ளார். அவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்ட அண்ணாமலை மக்களவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும், ஒரு தொகுதியில் யாருக்கு செல்வாக்கு அதிகமாக உள்ளது, எத்தனை பேர் போட்டியிடலாம், தேர்தலில் எப்படி கொண்டு செல்லலாம், அதோடு தேர்தல் வேலைகள் எந்த அளவிற்கு நடந்துள்ளது என பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இது தான் நேரம் அனைவரும் இறங்கி வேலை செய்ய வேண்டும் வரும் 2024 ஆம் ஆண்டு நமக்குதான் என அண்ணாமலை கட்டளையிட்டு இருப்பதாகவும் சில தகவல்கள் கசிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News