Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை மட்டுமல்ல மொத்த தமிழ்நாட்டுலயும் திமுக காலியாம்.... அறிவாலயத்தில் இடியை இறக்கிய செய்தி...

சென்னை மட்டுமல்ல மொத்த தமிழ்நாட்டுலயும் திமுக காலியாம்.... அறிவாலயத்தில் இடியை இறக்கிய செய்தி...
X

Mohan RajBy : Mohan Raj

  |  8 Dec 2023 3:02 PM GMT

முடியாத நிலையிலும் முதல்வருக்கு வந்த தென் மாவட்ட மெசேஜ் மொத்தமும் காலி! சென்னை மட்டுமல்ல தென் மாவட்டமும் காலி!

சென்னையை மொத்தமாக புரட்டிப் போட்டுவிட்டு கரையை கடந்து சென்று விட்டது மிக்ஜம் புயல் ஆனால் அதற்குப் பிறகு இந்த புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் மீள முடியாமல் ஐந்து நாட்களாக வெள்ள நீருக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர் சென்னை மக்கள்! அண்ணா சாலை, டி நகர் போன்ற சென்னை மாநகரின் பிரதான சாலைகளின் நீர் வடிந்திருந்தாலும் தெருக்கள் தோறும் குடியிருப்பு பகுதிகள் இருக்கும் பகுதிகளில் நீர் வடியாமல் பெரும் அவல நிலையே ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான மக்களுக்கு பால், உணவு பொருட்கள் மற்றும் நீர் என எந்த அத்தியாவசிய பொருள்களும் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர். புயலால் ஏற்பட்ட மழை நின்று கிட்டத்தட்ட ஐந்து நாட்களாகியும் மழை நீர் ஏன் இன்னும் அடையவில்லை இதுதான் நீங்கள் 4000 கோடி ரூபாய் செலவு செய்த திட்ட பணிகளில் நடவடிக்கையா என மக்கள் அரசியல் மீது கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் வலுவடைந்து கொண்டே செல்கிறது. சைதாப்பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு முழுவதும் மழை நீர் தேங்கி இருப்பதாகவும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு எந்த உணவு வழங்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலானோர் எங்கள் வீடு முழுவதும் தண்ணீர் நிரம்பி விட்டது பள்ளி சான்றிதழ் முதல் வீட்டின் சான்றிதழ் வரை அனைத்தும் வெள்ளத்தோடு சேதம் அடைந்து விட்டது அதற்கு பிறகு என்ன செய்யப் போகிறோம் என்று கதறி அழுகின்றனர் இருக்க இடம் இல்லாமல் சாலையிலும் போக்குவரத்து நிறுத்தங்களிலும் தங்கி வருவதாக சிலர் தெரிவிக்கின்றனர். இன்னும் சில பகுதிகளில் துண்டிக்கப்பட்ட மின்சாரமானது மீண்டும் வரவில்லை என்றும் நந்தம்பாக்கம் ஏரி அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் முழுவதும் மோசமான நிலையில் மழை நீர் வடியாமல் இருப்பதாகவும் அப்பகுதியில் இருக்கும் மக்கள் வெளிவர முடியாமல் தவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக கடந்த ஐந்து நாட்களை பார்க்கும் பொழுது சென்னை மக்கள் திமுக மீது கொண்ட அதிருப்தி மூலம் சென்னையில் இருந்து இனி திமுகவிற்கு ஒரு ஓட்டு கூட விழாது என்ற நிலையே தற்போது உள்ளது. அதாவது திமுக கோட்டையான சென்னையில் திமுக சரிவை சந்தித்துள்ளது, இந்த நிலையில் தென் மாவட்டத்திலும் திமுக சரிவை சந்தித்துள்ளது அதிலும் குறிப்பாக திருநெல்வேலியில் உள்ள திமுகவினர் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் செய்தி முதல்வருக்கு தற்போது கிடைத்துள்ளது. அதாவது திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமாக உள்ள 55 வார்டுகளில் 51 இடங்களில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் உள்ளன.

ஆனால் திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து திமுக கவுன்சிலர்கள் 38 பேர் கையெழுத்திட்டு அந்த மனுவை மாநகராட்சி ஆணையரிடம் அளித்துள்ளனர். இதற்கு மேயர் சரவணன் மேயர் ஆவதற்கு வழியாக இருந்த அப்துல் வகாப் என்பவருக்கும் இடையே இருந்த பனிப்போர் தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே உள்ள மோதலால் நெல்லையில் அரசு தரப்பில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் அனைத்தும் முடங்கி இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாடியிருந்தனர். இந்த உட்கட்சி மோதலை முடிவு கட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இருப்பினும் பிரச்சனை தீராமல் தற்பொழுது இந்த முடிவை திமுக கவுன்சிலர்கள் எடுத்துள்ளனர்.

ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத முதல்வர் சென்னையை எப்படி சரி செய்யப் போகிறோம் என தெரியாமல் திண்டாடி கொண்டிருக்கும் நிலையில் நெல்லையில் ஏற்பட்டுள்ள உட்க்கட்சியை பூசல் முதல்வரின் தலையில் இடியை இறக்கியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News